APJ Abdul Kalam Memories Never Die Book: "அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை"...
APJ Abdul Kalam Memories Never Die Book :
29.07.2023 அன்று ராமேசுவரத்தில் Dr. Apj Abdul Kalam Memories Never Die – “அப்துல் கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை” என்ற தலைப்பிலான ஆங்கிலப் பதிப்பை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், கலாமின் அண்ணன் மகளுமான நஜீமாமரைக்காயர் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘அப்துல் கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில், அப்துல் கலாமின் அண்ணன் மகள் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
தற்போது அப்துல் கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு ‘Dr. Apj Abdul Kalam Memories Never Die’ என்று ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.
APJ Abdul Kalam Memories Never Die | "அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை" - குறிப்புகள் :
இப்புத்தகம் ஒரு சாதாரண மீனவக் குடும்பத்தில் அப்துல் கலாம் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்ததற்கு எத்தனையோ ஆசிரியர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.
துரதிருஷ்ட காலத்திலும் தளராத மனப்பான்மை மற்றும் வெல்ல முடியாத உணர்வு, ஆகியவற்றுக்காக டாக்டர் அப்துல் கலாம், எப்போதும் நினைவு கூறப்படுவார். நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்புடன் எப்போதும் அப்துல் கலாம் வாழ்ந்தார்.
இளைஞர்களின் மனதை அப்துல் கலாம் தூண்டுவதில் ஆர்வமாக இருந்தார். அவர் எப்போதும் மாணவர்களுடன் உரையாட பள்ளிகளுக்குச் சென்றார். ஆயிரக்கணக்கான மாணவர்களை அப்துல் கலாம் தனது பேச்சு மற்றும் உற்சாகமான புன்னகை மூலம் ஊக்கப்படுத்தி உள்ளார்.
தொழில்நுட்பத்தைப் சமூக நலன் மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் அப்துல் கலாம் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்.
நாட்டின் விண்வெளி மற்றும் நாட்டின் பாதுகாப்புத் போன்ற முக்கிய துறைகளில், தற்சார்பு இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்த பெருமை உண்மையில் கலாமையே சேரும்.
கலாம் விட்டுச் சென்ற அடிப்படை நம்பிக்கை என்ற பாரம்பரியம்தான், இன்று நமது விஞ்ஞானிகளை கொரோனா தடுப்பூசி உருவாக்கத் தூண்டியுள்ளது.
மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியைக் கூட நாம் சுமாராகத் தொடங்கி, நாம் இன்று பிபிஇ உடைகள், என் 95 முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை போன்றவற்றை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
Covid -19 தடுப்பூசிக்காக அயராது உழைத்த விஞ்ஞானிகளுக்கும், அரசுக்கும் பாராட்டுகள்.
விவசாயம் போன்ற அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் அதில் முன்னணியில் இருக்க வேண்டும். இளைஞர்கள் வளர்ச்சி விகிதத்தை விரைவாகக் கண்டறிய இது ஒரு சிறந்த வழி. வேலை தேடுபவர்களைக் காட்டிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இளைஞர்கள் உருவாக வேண்டும். இதற்கான கல்வி முறை மாற்றத்தை அப்துல் கலாம் வலியுறுத்தினார்.
ஒரு நூல் மக்களைச் சென்றடைய அவர்களின் தாய்மொழியில் இருக்க வேண்டும். அப்துல் கலாம் உண்மையில் இந்த நாட்டின் பெருமகன். புத்தகத்தின் தலைப்பு அப்துல் கலாம் நினைவுகள் ஒருபோதும் இறக்காது என்பது சிறப்பானது.
அவர் எப்போதும் தனது வாழ்க்கையில் ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். ஒரு நல்ல வாழ்க்கை வாழ, ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை அவரது எளிமைதான்.
2021 ஜனவரியில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார் :
2021 ஜனவரியில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை சென்னை ஆளுநர் மாளிகையில் வெளியிட்டார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘அப்துல் கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில், அப்துல் கலாமின் அண்ணன் மகள் A.P.J.M நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
நசீமா மரைக்காயர் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயரின் மகள் நசீமா மரைக்காயர் மற்றும் அப்துல் கலாமுடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றிய Y.S.ராஜன் ஆகிய இருவரும் கலாமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இந்தப் புத்தகத்தில் கூடுதல் தகவல்கள் உள்ளன.
நுணுக்கமாக கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரால் மாணவப் பருவத்தில் கலாம் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்கள், நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. கலாமின் விருப்ப உணவு, மனதை வருடும் இசை, இயற்கையை நேசிப்பது போன்ற காரியங்களில் அலாதி பிரியம் பற்றி கூறியுள்ளார். அவர் திருக்குர் ஆன், திருக்குறள், பாரதியார் பாடல்கள் ஆகியவற்றை வாசித்து, நேசித்து வாழ்வியலாக மாற்றிக் கொண்டார் என்பதையும் விளக்கி உள்ளார்.
கலாமின் முன்னோர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியம் விரிவாக இந்நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன.
பிரபல விண்வெளி விஞ்ஞானி Y.S.ராஜன் அப்துல் கலாமின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர். ஒய்.எஸ். ராஜன் கலாமை எது சிறந்த நிர்வாகியாகவும், நிபுணத்துவம் வாய்ந்த மனிதராகவும், விண்வெளித் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியாகவும் விளங்கச் செய்தது என்பதை விளக்கி உள்ளார்.
Latest Slideshows
- Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
- Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
- Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
- RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
- Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
- Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
- Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
- Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
- SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்