Apophis Meteor Comes Close To Earth : பூமிக்கு நெருக்கமாக வரும் ‘அபோபிஸ்’ விண்கல் எச்சரிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

விண்கற்களால் (Meteor) பூமிக்கு ஆபத்து இருக்கிறது என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். வரும் ஆண்டுகளில் 29,000 கி.மீ தொலைவில் பூமிக்கு மிக நெருக்கமாக விண்கல் ஒன்று கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக நாடுகள் விண்வெளி துறையின் மீது அதிக முதலீடுகள் செய்வது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் தற்போது இருக்கும் உலகம் கடந்த காலங்களில் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வருகிறது.

சுமார் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் மனித இனமும் ஒன்று. இனியும் அழிவு வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதேனும் ஒரு விண்கல் (Meteor) பூமியை தாக்கினால் இந்த ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இந்த அழிவிலிருந்து தற்காத்துக் கொள்ள நாம் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காகத்தான் விண்வெளி துறைக்கு மட்டும் அதிக முதலீடுகள் செலவு செய்யப்படுகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Apophis Meteor Comes Close To Earth :

விஞ்ஞானிகள் கூறுவது போல வருங்காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என ஆய்வுகள் உறுதி (Apophis Meteor Comes Close To Earth) செய்திருக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகள் ‘அபோபிஸ்’ எனும் விண்கல் விரைவில் பூமியை தாக்கும் என்று எச்சரித்துள்ளனர். பூமிக்கு மிக நெருக்கமாக பல விண்கற்கள் இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் பூமியை தாக்கிவிடாது.  சில குறிப்பிட்ட விண்கற்கள் மட்டுமே ஆபத்தானவையாக பிரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 0 என்ற அளவில் வைக்கப்பட்டிருக்கும் விண்கற்கள் பூமியை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் 10 என்ற அளவில் வைக்கப்பட்டிருக்கும் விண்கற்கள் உறுதியாக பூமியை தாக்கும். இந்த அளவீடுகளில் ‘அபோபிஸ்’ விண்கல் 4-வது இடத்தில்உள்ளது.

2004-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது :

இந்த ‘அபோபிஸ்’ விண்கல் கடந்த 2004-ம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விண்கல் வரும் 2029-ம் ஆண்டு பூமியை தாக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஒருவேளை தவறினால் 2036-ம் ஆண்டு பூமியை தாக்கும். அப்போதும் தவறினால் 2068-ம் ஆண்டு பூமியை தாக்கும் என்று இஸ்ரோ கணித்திருந்தது.

10 ரிக்டர் அளவில் உருவாகும் நிலநடுக்கம் :

இந்த ‘அபோபிஸ்’ விண்கல் ஒருவேளை பூமியை தாக்கினால் சுமார் 3 கி.மீ ஆழத்தில், 10 கி.மீ அகலத்திற்கு ஒரு மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கும். இந்த கல் விழுந்த இடத்தை சுற்றி சுமார் 320 கி.மீ தூரத்திற்கு 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இந்த நிலநடுக்கத்தால் ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது. மேலும் லட்சக்கணக்கான மக்கள்  உயிரிழப்பார்கள். கோடிக்கணக்கான மக்கள் படுகாயமடைவார்கள், பூமியின் பொருளாதாரமானது கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அபோபிஸ் விண்கல் (Apophis Meteor Comes Close To Earth) நல்வாய்ப்பாக பூமி மீது மோதாது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் இந்த விண்கல்லை துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply