APPA App Launches : அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புக்கு APPA என்ற புதிய செயலி அறிமுகம்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்ற பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில், அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புக்கு ‘அப்பா’ (APPA) என்ற புதிய செயலியை (APPA App Launches) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.

கடலூர் சுற்றுப்பயணம்

பல்வேறு ஆய்வுக்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் நேற்று கடலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர்களை கொண்டாடுவோம் விழாவில் (APPA App Launches) முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அப்பா என்ற செயலியையும், புத்தகத்தையும் வெளியிட்டார். 

தமிழ்நாடு மாநில பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 7-வது மண்டல மாநாடாக இந்த ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழா’ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று (APPA App Launches) தாமதமாக வருகை தந்தார். வந்ததும் பெற்றோர்கள், ஆசிரியர்களை வணங்குகிறேன் என்று வணக்கம் தெரிவித்து உரையைத் தொடங்கினார். தான் தாமதமாக வந்ததற்கு காரணம் வரும் வழிகளில் மக்களை சந்தித்தேன். அதனால்தான் தாமதமாகிவிட்டது என்று வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

அப்பா செயலி அறிமுகம் (APPA App Launches)

APPA App Launches - Platform Tamil

மேலும் அவர் பேசுகையில் அம்மா, அப்பா மற்றும் ஆசிரியரை தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். சமீபகாலமாக கல்வித் துறையில் உலகத் தர சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்க்கிறோம் என்று கூறினார். மேலும் அவர் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில் அப்பா (APPA) என்ற பெயரில் செயலியை (APPA App Launches) அறிமுகம் செய்துவைத்தார். அப்போது பேசிய அவர் கட்சிக்காரர்கள் திராவிட முன்னேற்ற இயக்கத்துக்கு தலைவர் என்பதால் என்னை தலைவர் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் முதல்வர் என்று அழைக்கிறார்கள். தற்போதைய இளைய தலைமுறையினர் என்னை அன்புடன் அப்பா என்று அழைக்கும் போது ஆனந்தமாக இருக்கிறது. அப்பா என்ற உறவு எப்போதும் மாறாது. இந்த உறவு எனக்கு  கூடுதல் பொறுப்புகளை கூட்டியிருக்கிறது என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் நான் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது எனவும் தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply