Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது

உலகம் முழுவதும் மக்கள் அதிகம் எதிர்பார்த்த Apple iPhone 16 Series ஆனது இன்று நடைபெறும் ஆப்பிள் க்ளோடைம் (Apple Glowtime Event) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) ஆனது iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max ஆகிய நான்கு மாடல்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்துள்ள இந்த ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் (Apple iPhone 16 Series) சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள் (Apple iPhone 16 Series Specifications) :

இந்த ஐபோன் 16 சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போன்கள் ஐஓஎஸ்18 (iOS 18) மூலம் இயங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த போன்களை வாங்குபவர்களுக்கு மென்பொருள் அப்டேட் செய்வதற்கான அவசியம் இருக்காது. மேலும் இந்த ஐஓஎஸ்18 பல புதிய அம்சங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் A18 Pro Chipset உடன் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட்டானது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கூடுதலாக AI அம்சங்களுடன் இந்த ஐபோன் 16 சீரிஸ் போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் ‘கேப்சூல் வடிவ கேமரா’ உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது பழைய ஐபோன் மாடல்களில் உள்ள கேமரா அமைப்பு தான் இந்த போன்களிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பல மேம்பட்ட அம்சங்கள் ஐபோன் 16 சீரிஸ் கேமராக்களில் இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் பேட்டரி பேக்கப் வசதியில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் (Apple iPhone 16 Series) விற்பனைக்கு வருவதால் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 & ஏர்பாட்ஸ் 4 அறிமுகம் :

இந்த ஆப்பிள் க்ளோடைம் (Apple Glowtime Event) வெளியீட்டு நிகழ்வில் AirPods SE, AirPods 4 மற்றும் Apple Watch Series 10 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply