Apple Store In India: இந்தியாவில் முதல் ஆப்பிளின் சில்லறை விற்பனை நிலையம்
வரலாற்றில் முதல்முறையாக நேரடி சில்லறை வர்த்தகத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். தொழில் நுட்ப சாதனங்களில் உலகளவில் பெயர்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது. மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) யில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் தனது முதல் அதிகாரபூர்வ சில்லறை விற்பனை கடையை நேற்று திறந்துள்ளது.
ஆப்பிள் தனது முதல் அதிகாரப்பூர்வ கடையை இந்தியாவில் மும்பையில் திறந்தது. பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், இந்தியாவில் திறக்கப்படும் முதல் சில்லறை விற்பனை நிலையமாகும். இரண்டாவது விற்பனை நிலையம் டெல்லியில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் காலை 11 மணிக்கு கதவு திறக்கப்பட்டதும் வாடிக்கையாளர்களை வரவேற்க, ஆப்பிள் சிஇஓ டிம் குக் விற்பனை நிலையத்தில் இருந்தார்.
ஆப்பிளில், எங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் செய்யும் அனைத்திலும் மையமாக உள்ளனர், மேலும் இந்தியாவில் எங்களது முதல் சில்லறை விற்பனைக் கடையைத் திறக்கும் போது, இந்த அற்புதமான தருணத்தை அவர்களுடன் கொண்டாடுவதில் எங்கள் குழுக்கள் உற்சாகமாக இருக்கின்றனர், என்று ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டெய்ட்ரே ஓ பிரையன் கூறினார். “ஆப்பிள் பிகேசி யானது மும்பையின் கலாச்சார மையமாகவும், மேலும் சமூகத்தையும், கலாச்சாரத்தையும் வரவேற்கும் இடத்தில் ஆப்பிள் ஒன்றிணைக்கிறது.
Apple BKC ஆனது Apple தொடங்கப்பட்ட நேற்று “மும்பை ரைசிங்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஏப்ரல் 18, செவ்வாய்க் கிழமை முதல் கடையின் தொடக்க நாளான – கோடை முழுவதும் வழங்கும். பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள், கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் ஆப்பிளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கொண்ட இந்த இலவச அமர்வுகள் நடத்தப்பட்டு சமூகம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் செயல்பாடுகளை வழங்கும்.
ஆப்பிள் ஸ்டோர் உலகின் மிகவும் ஆற்றல் திறனுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சூரிய வரிசை (Solar array) மற்றும் புதைபடிவ எரிபொருட்களை பூஜ்ஜியமாக செயல் படுத்துகிறது. இந்த ஸ்டோர் கார்பன் நியூட்ரல் புதுப்பிக்கப்பட்டு அதன் ஆற்றலினால் இயங்குகிறது. ஸ்டோரின் உட்பகுதியில் இயற்கை சூழலுக்கு ஏற்ப செடிகள் வைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஸ்டோர் ஒரு முக்கோண வடிவிலான வடிவமைப்பை கொண்டுள்ளது. 20,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கைவினை மர பொருட்களால் மேல்புறம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஓடுகளும் 408 மர கட்டைகளால் ஆனது. இதற்கான மர கட்டைகளை டெல்லியில் இருந்து வரவைக்கப் பட்டுள்ளனர். ஸ்டோரின் படிக்கட்டுகள் மற்றும் தூண்கள் ராஜஸ்தானில் இருந்து வரவைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் நிறுவனங்களைப் போன்ற சாயலிலே அமைந்துள்ளது.
பார்வையாளர்கள் அழைக்கப்பட்டு சமீபத்திய iPhone, Mac, iPad, AirPods, Apple Watch மற்றும் Apple TV வரிசைகள் மற்றும் AirTag போன்ற பாகங்கள் அட்டவணைப் படுத்தி பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. Apple BKC ஆனது Apple Pickupஐயும் வழங்குகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்வதையும், அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் போது பொருட்களை எடுப்பதையும் எளிதாக்குகிறது.
ஆப்பிள் ஸ்டோர் 100 க்கும் அதிகமான குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் அனைவரும் பல்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் 20 மொழிகளில் பேசுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து வாடிக்கையாளர்களை வரவேற்கத் தயாராக உள்ளனர், ஆப்பிள் தயாரிப்புகளைப் பற்றி அறிய உதவுகிறார்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த விருப்பங்கள் மற்றும் ஆப்பிள் டிரேட் இன் திட்டத்தில் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
ஆப்பிள் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, மேலும் சமூகத்திற்கான அதன் ஆழ்ந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, ஆகாங்ஷா அறக்கட்டளை, வெர்ஃபுட் காலேஜ் இன்டர்நேஷனல், அப்ளைடு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளை (AERF) மற்றும் பிறவற்றிற்கு ஆப்பிள் அதன் நீண்டகாலமான ஆதரவைத் தொடர்கிறது.