Applying For Land Survey Through Online : புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது

Applying For Land Survey Through Online :

இணைய வழியாக நில அளவைக்கு விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி (Applying For Land Survey Through Online) வைத்துள்ளார். நில உரிமையாளர்கள் தங்களின் நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதனை மாற்றும் வகையில் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற புதிய இணைய முகவரி வாயிலாக இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் இந்த புதிய இணையதள சேவையின் மூலம் மக்கள் நில அளவைக்கு விண்ணப்பிக்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய தேவை இல்லை. நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் ஆகியவற்றை இணைய சேவை வழியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இப்புதிய வசதியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் (Applying For Land Survey Through Online) துவக்கி வைத்தார். இப்புதிய சேவையால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நில அளவைக்கான கட்டணம் போன்றவற்றை வங்கிகளில் செலுத்தலாம் அல்லது இணையவழியாகவும் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலம் அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு மொபைல் போன் வழியாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்ட பிறகு மனுதாரர் மற்றும் நில அளவையர் கையொப்பமிட்ட ‘அறிக்கை’ மற்றும் ‘நிலத்தின் வரைபடம்’ ஆகியவற்றை நில அளவைக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை (Applying For Land Survey Through Online) உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ‘பட்டா மாறுதல்’ – ‘தமிழ் நிலம் கைப்பேசி செயலி’ இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) ஆகிய இரு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply