April 2024 GST Revenue Collection: இந்தியாவில் April, 2024 மாதத்தில் GST வசூல் புதிய உச்சம் அடைந்துள்ளது.

April 2024 GST Revenue Collection : இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் GST  நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த GST நடைமுறைப்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டின் முதல் பாதிவரை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. GST கவுன்சில் ஆனது மத்திய அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்குடன் GST எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி விகிதங்களை உயர்த்தி உள்ளது. மொத்தம் 3 நிலைகளில் GST வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய விகிதங்களில் GST வசூலிக்கப்பட்டு வருகிறது.

GST குழு ஆனது குறைந்தபட்ச வரியாக 5% வரி விகிதத்தை 9-10% ஆக உயர்த்துவது, 12% வரி விகிதத்தை ஒழித்து விட்டு, அப்பிரிவில் உள்ள 243 பொருட்களை 18% பிரிவுக்கு கொண்டு செல்வது ஆகிய உத்தேச வரி உயர்வு திட்டம் கொண்டுள்ளது. இந்த வரி உயர்வு திட்டம்  மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களுக்கு புதிதாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் சிலவற்றை புதிதாக வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த GST குழுவின் வரி உயர்வு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் தற்போது இந்தியா ஆனது GST வரி விகிதம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ரூ.68,228 கோடி வரி வசூல் (April 2024 GST Revenue Collection)

இந்தியாவில் 20/04/2024-ந்தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 20/04/2024-ந்தேதி 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக ரூ.2.10 லட்சம் கோடி GST வசூல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத GST வசூல் ரூ.12,210 கோடியாக உயர்ந்ததுள்ளது என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த  2023 ஏப்ரல் மாதத்தின் GST வசூலுடன் ஒப்பிடுகையில்,  இந்த  2024 ஏப்ரல் மாதத்தின் GST வசூல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத GST வசூல் ரூ.12,210 கோடியாக உயர்ந்ததுள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இந்திய நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிக GST வரிவிகிதம் காரணமாக நசிவடைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply