AR Rahman Birthday - புதிய சிறப்பு பெயர் கொடுத்து கமல்ஹாசன் வாழ்த்து

AR Rahman Birthday – இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் AR Rahman 06.01.2023 அன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடாடினர். AR Rahman இசை தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, காதலர் தினம், நியூ, காதல் தேசம், அச்சம் என்பது மடமையடா ஆகியனவும், இந்தியில் ரங்கீலா,  லகான், ராக் ஸ்டார், லகான் ஆகியனவும் குறிப்பாக சொல்லலாம் .

சமீபத்தில் வெளியான மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய  படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.

ரசிகர்களை இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளன. தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன்,  கமல்ஹாசன் 234, ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் ரஜினியின் லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி ரசிகர்களும் திரையுலகினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன்  ரஹ்மானை வாழ்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்  கமல்ஹாசன்   “இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர். ‘இசைவாணர்’ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழிய பல்லாண்டு ஏ.ஆர்.ரஹ்மான்! #ARRahman” ‘இசைவாணர்’ என சிறப்பு பெயரையும் ரஹ்மானுக்கு கமல்ஹாசன் அளித்து ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Latest Slideshows