AR Rahman Honorary President Of London College : டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்

ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்து (AR Rahman Honorary President Of London College) வருகிறார். மேலும் இவர் சில ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். இவர் உலகம் முழுக்க தனது மயக்கும் இசைக்காக ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். உலக இசையரங்கில் இந்திய நாட்டின் இசைக்கான அடையாளங்களுள் ஒருவராக அவர் திகழ்ந்து வருகிறார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதினை வென்ற ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் உட்பட பல உயரிய விருதுகளை பெற்றவர். ஸ்லம்டக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றவர். இந்திய நாடு அவரால் பெருமை பெற்றது.

AR Rahman Honorary President Of London College

தற்போது லண்டனை சேர்ந்த இசை மற்றும் நடனக் கல்லூரியான Trinity Laban-னின் கௌரவ தலைவராக (AR Rahman Honorary President Of London College) அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த டிரினிட்டி கல்லூரி கடந்த 2005-ல் உருவாக்கப்பட்டது. இந்த டிரினிட்டி லாபான் இசை கல்லூரியில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு பயின்று வருகின்றனர். இந்த Trinity Laban Conservatoire Of Music And Dance கல்லூரி ஏ.ஆர்.ரகுமானின் கே.எம் இசை கல்லூரியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த ‘Trinity Laban Conservatoire Of Music And Dance’ இசைக் கல்லூரியின் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக் கல்லூரியின் தலைவர் ஆண்டனி உரை

இந்த இசைக்கல்லூரியின் தலைவரும், பேராசிரியருமான ஆண்டனி “எங்கள் மாணவர்களின் இசை அனுபவங்களை விரிவுபடுத்துவதற்கும், கலையின் புதிய வடிவங்களை கற்றுக் கொள்வதற்கும் ஏ.ஆர்.ரகுமானின் (AR Rahman Honorary President Of London College) தலைமையானது ஊக்கமளிக்கும் என நாங்கள் நம்புகிறோம், மாணவர்களுக்கு அவரது தலைமை உத்வேகமாகவும், மாணவர்களின் கலை வளர்ச்சிக்கு உதவிகரமாகவும் இருக்கும். ” என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் உரை

ஏ.ஆர்.ரகுமான் இது தொடர்பாக கூறுகையில் இந்த ‘Trinity Laban Conservatoire Of Music And Dance’ இசைக்கல்லூரியின் (AR Rahman Honorary President Of London College) கவுரவத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கிடைத்த கெளரவம் மற்றும் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply