Arai Keerai Benefits : அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Arai Keerai Benefits

அரைக்கீரை பெயருக்குத்தான் இப்படி அழைக்கிறார்கள், ஆனால் எல்லாவிதமான சத்துக்களும் நிறைந்தது இந்தக் கீரை. அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற கீரை (Arai Keerai Benefits) ஆகும். இது தடிமனான வேரில் பல கிளைகளை விட்டு அரை அடி முதல் ஒரு அடி உயரம் வரை புதர் போல் வளரும் தன்மை கொண்டது. இலையின் மேல் பகுதி பச்சை நிறமாகவும், கீழ் பகுதி சிவப்பு மற்றும் நீல நிற கலவையாகவும் இருக்கும். இந்த கீரையை ஒருமுறை பயிரிட்டால் பல மாதங்களுக்கு விளைச்சலை கொடுக்கும். இது ஒரு சுவையான அனைவரும் விரும்பும் கீரை ஆகும். இந்த கீரை பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கீரையை தாராளமாகவும் தைரியமாகவும் சாப்பிடலாம். தினமும் அரைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்பார்கள். இது தவறு. இந்த கீரைக்கு வெப்பத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது. இந்நிலையில் அரைக்கீரையை தினமும் சாப்பிட்டு வருவதால் ஏற்படும் நன்மைகளை பற்றிக் காணலாம்.

அரைக்கீரையின் மருத்துவ நன்மைகள் (Arai Keerai Benefits)

ருசி தன்மை தெரிய

சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் உணவின் சுவையே தெரியாது. அப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு புளி சேர்த்து ஒரு வாரத்திற்கு மதியம் வேலை சாப்பிட்டு வந்தால் சுவை வெளிப்படும்.

ஆண்மை குறைபாடு நீங்க

இன்றைய நவீன யுகத்தில் திருமணமாகாத இளைஞர்களும் சரி. திருமணமானவர்களும் சரி ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனையை போக்க அரைக்கீரை (Arai Keerai Benefits) உதவுகிறது. இந்த கீரை திருமண வாழ்க்கைக்கு விசேஷமானது என்றும், அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. புதுமணத் தம்பதிகள் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவதற்காக கிராமப்புறங்களில் இந்த கீரையை செய்து தருவார்கள். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே ஆண்மை குறைவிலிருந்து விடுபடலாம்.

வளரும் குழந்தைகளுக்கு

வளரும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கவும், புத்திசாலித்தனத்துடன் பயிலவும், உடல் வலுவாக வளரவும் அரைக்கீரைகளை கொடுக்க வேண்டும்.

பிரசவித்த பெண்களுக்கு உதவும்

இயல்பவே குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் சோர்வாக இருப்பார்கள். இழந்த ஆற்றலையும் வலிமையையும் மீட்டெடுக்க அரைக்கீரை உதவுகிறது. அதேபோல் இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கீரையை (Arai Keerai Benefits) அடிக்கடி செய்து சாப்பிட வேண்டும். இதனால் இரத்த சோகை குணமாகும். இந்த கீரையை 21 நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சோகை நீங்கும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

உடல் வலி குறையை

கொஞ்சம் வேலை செய்தாலே, சிலருக்கு உடம்பு முழுக்க வலிக்கிறது என்பார்கள். அவர்களுக்கு அரைக்கீரை மிகவும் உதவியாக இருக்கும். மிளகு, பூண்டு, பெருங்காயம், சுக்கு ஆகியவற்றை அரைக்கீரையோடு சேர்த்து பொரியல் செய்து பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கும்.

சளி இருமல் நீங்க

அரைக்கீரையுடன் வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்து கடைந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் நீங்கும். பல நன்மைகளை கொண்டுள்ள இந்த கீரையை சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply