Aranmanai 4 Update : அரண்மனை 4 திரைப்படம் குறித்து சுந்தர்.சி

  • சுந்தர்.சியின் Aranmanai 4 படத்தின் ட்ரெய்லர் (Aranmanai 4 Update) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
  • விழாவில் பேசிய சுந்தர் C, Aranmanai 4 மற்ற பாகங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அரண்மனை :

சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து 2016ல் அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது. இதில் சித்தார்த், த்ரிஷா, கோவை சரளா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படமும் வெற்றி பெற்றதால், படத்தின் மூன்றாம் பாகம் 2021ல் வெளியானது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷிஷி அகர்வால், விக்வேக் மற்றும் பலர் நடித்தனர். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Aranmanai 4 ட்ரெய்லர் :

அதே அரண்மனை தொடர்ந்து பேய் என அரைத்த மாவையே அரைத்து கொண்டிருந்ததால் மூன்றாம் பாகம் தோல்வியடைந்தது. இதையடுத்து மீண்டும் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜேபி, விச்சு, சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது, இதில் சுந்தர்.சியின் தங்கையான தமன்னா மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் வழக்கறிஞராக சுந்தர் சி நடித்துள்ளார். மேலும், அதே அரண்மனையில் இருக்கும் பேய், பேயை விரட்ட ஒரு சாமியார் தீர்வு சொல்வது போன்ற வழக்கமான கதைதான் படத்தில் இருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது.

Aranmanai 4 குறித்து சுந்தர்.சி :

Aranmanai 4 Update : ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர் சி, அரண்மனை எனது வாழ்க்கையில் முக்கியமான படம் என்றும், அரண்மனை முதல் பாகத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த பாகங்களை இயக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். ஆனால், அரண்மனை படத்திற்கு மக்கள் அளித்த ஆதரவும் வரவேற்பும் என்னை அடுத்தடுத்த பாகங்களை எடுக்க வைத்தது. மேலும், Aranmanai 4 படத்தின் கதை, கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் என அனைத்து பாகங்களை விட வித்தியாசமாக இருக்கும். கீர்த்தியுடன் இணை எழுத்தாளர் கதை பற்றி பேசிக் கொண்டிருந்த போது, ​​அவர் ஒரு விஷயம் சொன்னார்.

இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட மன்னர்கள் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், கிழக்குப் பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா நதியைத் தாண்டி யாரும் செல்லவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவர்களில் ஒருவர் பேய் என்றும் மற்றவர் கடவுள் என்றும் கூறினார். அதுதான் அரண்மனை 4 என சுந்தர் சி தெரிவித்துள்ளார். Aranmanai 4 படத்தில் முதலில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால், அப்போது படத்தில் பிசியாக இருந்ததால், படத்திலிருந்து விலகிவிட்டார். தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கேட்டதற்குப் பிறகு தான் படத்தில் ஹீரோவாக நடித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply