Arjun Tendulkar Cricket Future: எனக்கு கிடைத்ததை என் மகனுக்கும் கிடைக்க வைப்பேன் மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
தனக்கு இளம் வயதில் வயதில் கிடைத்த சுதந்திரமான சூழலை தனது மகனுக்கும் உருவாக்க முயற்சி செய்து வருவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். “சின்ட்டிலேட்டிங் சச்சின்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது.
சிறுவயதிலேயே குடும்பத்தில் இருந்து எனக்கு ஆதரவு கிடைத்தது. அஜித் டெண்டுல்கர் (சகோதரர்) எனது பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். என் பிறந்தநாளில் நிதின் டெண்டுல்கர் (சகோதரர்) எனக்காக ஓவியம் தீட்டி கொடுத்தார். என் அம்மா எல்.ஐ.சி.யில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அப்பா ஒரு பேராசிரியர். அவர்கள் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சிறிய வயதில் எனக்கு கிடைத்த சுதந்திரமான சூழல்களை என் மகனுக்கும் கிடைக்க முயற்சிக்கிறேன். நம்மை நாமே பாராட்டினால்தான் மக்கள் நம்மை பாராட்டுவார்கள். விளையாட்டில் கவனம் செலுத்த என் தந்தை சொன்ன அறிவுரையை இப்போது அர்ஜுனுக்கு சொல்கிறேன். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது ஊடகங்கள் என்னைப் பாராட்டின. எனது மகனை விளையாட்டில் கவனம் செலுத்தவும், விளையாட்டை நேசிக்கவும் அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். என் மகனுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அதனால் இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன். ஆனால் என் மனைவி அஞ்சலி நேராக ஆஸ்திரேலியா வந்து, அறுவை சிகிச்சையை ரத்து செய்துவிட்டு என்னுடன் தங்கி என்னைக் கவனித்துக்கொண்டார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.