Artemis 3 திட்டத்தில் நாசா 2027-ம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டம்

Artemis 3 திட்டத்தில் நாசா வரும் 2027-ம் ஆண்டு மனிதர்களை நிலவில் தரையிறக்கும் என்று அமெரிக்க அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாசா Artemis 3 திட்டத்தின் மூலம் நிலவில் மனிதர்களை தரையிறக்க உள்ளது. கடந்த 1969 ஆண்டு அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா அதன் பிறகு 50 ஆண்டுகள் கழித்து  இப்போது இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே ஆர்ட்டெமிஸ் 1 மற்றும் 2 மூலம் நாசா சோதனை முயற்சி செய்தது.

அமெரிக்காவின் அரசாங்க பொறுப்புக் கூறல் அலுவலகம் (GAO) நாசா திட்டங்களில் எதிர்கொள்ளும் சிரமங்களை ஆவணப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டது. எங்களின் கடைசி அறிக்கையில் இருந்து ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் நாசாவும் அதன் ஒப்பந்தக்காரர்களும் முன்நோக்கிச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சந்திர லேண்டர் மற்றும் விண்வெளி உடைகளை உருவாக்குவதில் இன்னும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். சில விண்கலன் சோதனைகள் தாமதமாகிவிட்டன. இது அடுத்தடுத்த சோதனைகளின் நேரத்தை பாதிக்கலாம். மிகவும் கணிசமான அளவு சிக்கலான வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் காரணமாக திட்டமிட்டபடி சந்திரனில் தரையிறங்கும் பணி 2025இல் நிகழ வாய்ப்பில்லை என்று நாங்கள் கண்டறிந்தோம் என்று அறிக்கை கூறுகிறது.

Artemis 3 - ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் சவால்கள் :

மனிதர்களை தரையிறசக்கும் உடைகள்  தயாரித்து முடிக்க 79 மாதங்களில் முடிக்க இலக்காகக் கொண்டுள்ளது. இது பெரிய நாசா திட்டங்களுக்கான சராசரியை விட 13 மாதங்கள் அதிகம். ஆனால் திட்டத்தின் சிக்கலான தன்மை காரணமாக இது இன்னும் கூடுதல் நேரம் எடுக்கும். இதனால்தான் Artemis 3 திட்டம் வரும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று GAO மதிப்பிட்டுள்ளது.

ஹயூமன் லேண்டிங் சிஸ்டம் ஏற்கனவே 13 முக்கிய நிகழ்வுகளில் 8 முக்கிய நிகழ்வுகள் செப்டம்பர் 2023 வரை குறைந்தது ஆறு மாதங்கள் அளவுக்கு தாமதமாகிவிட்டன. இவற்றில் இரண்டு நிகழ்வுகள் ஆரம்பத் திட்டமிட்டபடி லேண்டர் ஏவப்பட வேண்டிய ஆண்டான 2025-க்குள் தாமதமாகிவிடும். இந்த தாமதங்களை குறைப்பதற்காக ஆர்பிட்டல் ஃப்ளைட் டெஸ்டால் ஓரளவு ஏற்படுத்தப்பட்டது. இது ஏவுகணை வாகனம் மற்றும் விமானத்தில் லேண்டர் உள்ளமைவின் சில அம்சங்களை நிரூபிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply