Ashes 5th Test Day 1: இங்கிலாந்தை முதல் நாளிலேயே முடித்துக் கட்டிய ஆஸ்திரேலியா...

கடைசி டெஸ்ட் :

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பந்து வீசி உள்ளது. இதன் மூலம் வெறும் 283 ரன்களுக்குள் இங்கிலாந்தை ஆல் அவுட் செய்துள்ளது. அது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசஸ் டெஸ்ட் போட்டியின் நான்காவது போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் அது நடந்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். இதன் மூலமாகவே ஆஷஸ் தொடரை இங்கிலாந்து இழந்தது. இதனால் இங்கிலாந்தின் முன்னால் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரும் கொந்தளித்துள்ளனர். அன்று மட்டும் மழை பெய்யாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக தோற்று இருக்கும் என்று விமர்சித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் :

இதற்கு ஆஸ்திரேலிய அணி தரப்பில் எந்தவித பதிலும் கொடுக்கப்படவில்லை. இதனை சேர்த்து வைத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்தது. போட்டியில் டாஸ் வென்ற பிறகு உடனடியாக பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது. இந்த டாஸ் விஷயத்தில் கேப்டன் கம்மின்ஸ் தவறாக முடிவு எடுத்துள்ளதாக அனைவரும் விமர்சித்தனர். ஆனால் ஆக்ரோஷமாக பந்து வீசி அவர்களின் விமர்சனங்களை தவிடு பொடி ஆக்கினார். முதலில் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்த இங்கிலாந்து அணி இறுதியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் திணறியது.

ஆஸ்திரேலியா அணி நட்சத்திர பவுலர் ஸ்டார்க் மட்டும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 61 ரன்கள் அடித்துள்ளது. ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் பேஸ் பால் முறையை ஆஸ்திரேலிய அணி அடித்து நொறுக்கி உள்ளது. ஆஸ்திரேலியா அணி அசால்டாக விளையாடி வருகிறது என விமர்சித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply