Ashwin 4rd Test Match : அஸ்வினுக்கு ஓவர் கொடுக்காமல் இருந்ததற்கு ஐசிசி விதிகள் தான் காரணமா?

Ashwin 4rd Test Match :

இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீத்தி, தாயின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் டெஸ்டில் அவர் மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜ்கோட் மைதானத்தில்தான் அஸ்வின் 500வது விக்கெட்டை வீழ்த்தினார். உற்சாகமான அஸ்வின் அன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், தான் ஒரு தற்செயலான சுழற்பந்து வீச்சாளர் என்று அஷ்வின் கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அன்று இரவே அஷ்வின் அவசரமாக சென்னை திரும்பினார்.

அவரது தாயின் உடல்நிலை மோசமடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த அஷ்வின் உடனடியாக பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து 3வது டெஸ்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் 3-வது நாளில் அஷ்வின் இல்லாமல் இந்திய அணி பந்துவீசியது. இதன் காரணமாக அஸ்வினால் 500வது விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியவில்லை. சிறப்பு விமானம் மூலம் தொடர்ந்து 4-வது நாளாக மீண்டும் இந்திய அணியில் (Ashwin 4rd Test Match) இணைந்தார் அஸ்வின். இதனை அடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணியை இமாலய ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி அசத்தல் வெற்றி பெற்றது.

ப்ரீத்தி நாராயணன் :

இதற்கிடையில், அஸ்வின் மனைவி ப்ரீத்தி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் தனது 500வது விக்கெட்டை எடுப்பதற்காக காத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. விசாகப்பட்டினத்தில் மைல்கல்லை எட்டுவார் என்று நினைத்தோம். அங்கேயும் நடக்கவில்லை. ஆனால் 499 விக்கெட்டுகள் என்ற இலக்கை எட்டியபோது, ​​டன் கணக்கில் இனிப்புகளை வாங்கினோம். அதன்பின் ராஜ்கோட் டெஸ்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் 500வது மற்றும் 501வது விக்கெட்டுகளுக்கு இடையில் நிறைய நடந்தது. இது எங்கள் வாழ்வில் மிக நீண்ட 48 மணி நேரம் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாயை விட்டு நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடிய அஷ்வினுக்கு ரோகித் சர்மா ஆரம்ப ஓவர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 27 ஓவர்களுக்குப் பிறகு ரோஹித் சர்மா முதல் ஓவரை அஷ்வினிடம் கொடுத்தார். அதற்குள் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்து தடுமாறியது. நாட்டிற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்த வீரருக்கு முன்பே ஓவர் கொடுக்காதது ஏன் என ரோகித் சர்மா மீது ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். ஆனால் ரோஹித் ஷர்மா மீது எந்த தவறும் இல்லை. இது முழுக்க முழுக்க ஐசிசி விதிகள் காரணமாகும். ஒரு வீரர் காயம் காரணமாகவோ அல்லது வேறு வழியிலோ நிற்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினால், அவர் எவ்வளவு நேரம் மைதானத்தில் இல்லையோ அவ்வளவு நேரம் களத்தில் இருந்த பிறகு தான் பந்து வீச வேண்டும் என்பது ஐசிசி விதி. இதனால்தான் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் 27 ஓவர்களுக்குப் பிறகு பந்து வீச வந்தார். இங்கிலாந்து மோசமாக விளையாடுவதால் அஷ்வினியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ரோஹித் எதிர்பார்த்த நிலையில், ஜடேஜாவும், குல்தீப் யாதவும் அதை தேவையற்றதாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply