Ashwin Announces Retirement : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்

இன்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த  நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு (Ashwin Announces Retirement) பெறுவதாக இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருக்கிறார்.

அஸ்வின் ஓய்வு அறிவிப்பு (Ashwin Announces Retirement)

ரவிச்சந்திரன் அஸ்வின் இளமைக்காலம்

சென்னையை பூர்வீகமாக கொண்ட அஸ்வின் 9 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் வேகப் பந்துவீச்சாளரான அவரை பயிற்சியாளர் சந்திரசேகர ராவ் ஆஃப் ஸ்பின்னராக மாற்றினார். கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சுக்கு (Ashwin Announces Retirement) முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக அந்த சீசனில் மட்டும் அஸ்வின் 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பந்து வீச்சில் புதிய நுட்பங்களை உருவாக்கியவர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஃப் ஸ்பின் வீரர்களான ஸ்ரீனிவாச வெங்கட்ராகவன், குலாம் அகமது, ஹர்பஜன் சிங் என ஆஃப் ஸ்பின்னர்களுக்கென்று ஒரு தனி வரிசை உள்ளது. இந்த வரிசையில் தனக்கென ஒரு தனியிடத்தை (Ashwin Announces Retirement) உருவாக்கியவர் அஸ்வின். சொல்லப்போனால் மைதானத்தில் இடதுபுறத்தில் பந்து குத்தி வலதுபுறம் எகிறிச் செல்வது போல் பந்தை வீசுவதே அஸ்வின் பாணி. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் புதிய நுட்பங்களை கொண்டு கேரம் பால் பந்து வீச்சை புதிதாக உருவாக்கினார். இந்த ‘கேரம் பால்’ நுட்பத்தின் மூலம் போட்டிகளில் விரைவாக விக்கெட்களைக் குவித்தார் அஸ்வின்.

அதிவேக விக்கெட்களை குவித்தவர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலக அளவில் அதிவேகமாக 200, 250, 300, 350 என விக்கெட்களைக் குவித்தவர் அஸ்வின். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 37 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட  விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்தியர் என்னும் பெருமையை நீண்டகாலமாகத் தக்க வைத்திருப்பவர் அனில் கும்ப்ளே. அவரின் சாதனையை முறியடித்து 620-வது விக்கெட் எடுத்த பிறகு தான் தனது ஓய்வை அறிவிப்பேன் என கூறிவந்த நிலையில், இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் 537 எடுத்திருக்கும் போதே ஓய்வை அறிவித்திருப்பது (Ashwin Announces Retirement) ரவிச்சந்திரன் அஸ்வினின் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply