Ashwin Imitates Harbhajan Singh: எனக்கு குரு என்றால் எப்போதுமே ஹர்பஜன்சிங் தான்…

அண்மையில் நடந்த உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அஸ்வின் விளையாடாதது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமானது.

இதனால் கடுப்பான ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்கள் இனி கிரிக்கெட் விளையாடும் போது ஒவ்வொரு முறையும் தான் ஏன் பவுலிங் ஆனேன் என்று கவலை கொள்ள போகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சிறப்பாக பர்ஃபார்ம் செய்து தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

அஸ்வின் சாதனை :

அஸ்வின் அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவர் அடுத்த இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் மொத்தமாக இந்த போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பல்வேறு சாதனையை முறியடித்துள்ளார்.

அஸ்வின் அவர்கள் இந்திய அணிக்காக ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதன் மூலம் கும்ளே சாதனையை சமன் செய்தார். கும்ளே இதற்கு முன்னர் ஒரு டெஸ்ட் போட்டியில் எட்டு முறை பத்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இது மட்டும் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 707 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படுத்துள்ளார் அஸ்வின்.

ஹர்பஜன் சிங் தான் என்னுடைய ரியல் ஹீரோ :

அஸ்வின் பேட்டியில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தான் என்னுடைய ரியல் ஹீரோ என்று தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனி ஒரு ஆளாக ஹர்பஜன் சிங் வெற்றியைத் தேடித் தந்தது யாராலும் மறக்க முடியாது. 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரை எண்ணிப் பார்க்கையில் இப்பொழுதும் பசுமையாக உள்ளது. நான் சிறுவயதாக இருக்கும் போதே அவரின் பந்து வீச்சை காப்பி அடிக்க முயன்று வருகிறேன். அப்படிப்பட்ட வீரர் மத்தியில் நானும் இருக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்ற அஸ்வின் தெரிவித்திருந்தார்.

Latest Slideshows

Leave a Reply