Asia Cup 2023 Final Match Award: மைதான ஊழியர்களுக்கு சிராஜ் பணம் கொடுத்ததில் மர்மம்...

Asia Cup 2023 Final Match Award: சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு மொஹமட் சிராஜ் பணம் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி வீரர் முகமது சிராஜ் தனது ஆட்ட நாயகன் விருதுக்காக ரூ.4 லட்சத்தை இலங்கை மைதான ஊழியர்களிடம் வழங்கினார். மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சுமார் ரூ.41 லட்சம் பங்களித்தது.

இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டி மழையால் குறுக்கிட்டபோது மைதான ஊழியர்கள் கடுமையாக உழைத்து மழைக்கு நடுவே போட்டிகளை முடிக்க பெரிதும் உதவினர்.

தங்களுக்கு நிச்சயம் வெகுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்பின், இறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ​​ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா இலங்கையில் கடுமையாக உழைத்த அனைத்து மைதான ஊழியர்களுக்கும் 41 இலட்சம் (50,000 டாலர்கள்) கொடுத்தார்.

முகமது சிராஜ் - Asia Cup 2023 Final Match Award:

Asia Cup 2023 Final Match Award Cash Price: இறுதிப்போட்டியில் இந்தியா அதிரடியாக பந்துவீசி இலங்கையை 50 ரன்களுக்கு சுருட்டியது. இந்திய வீரர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆசிய கோப்பையை இந்தியா வென்றதையடுத்து முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

தனக்கு வழங்கப்பட்ட ரூ.4 லட்சத்தை (5,000 டாலர்) இலங்கை மைதான ஊழியர்களிடம் கொடுத்தார். பிசிசிஐ செயலாளரும், இந்திய வீரரும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கை ஊழியர்களுக்கு பணம் கொடுத்தது ஏன்? என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

அர்ஜுன ரணதுங்கா

இதற்கு முன்னரும் இந்தியா இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அப்போதும் மழை பெய்தது. அப்போதும் இதே ஊழியர்கள் போட்டி நடக்க நிறைய உதவியிருக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் அவர்களுக்கு பணப்பரிசு வழங்கவில்லை. அதன் பிறகு அவர்களுக்கு வீரர் விருதுக்கான பணமும் வழங்கப்பட்டது. இலங்கை மைதான ஊழியர்கள் இதுவரை சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஆனால் இலங்கை நிர்வாகம் கூட அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனை ஊடகங்கள் ஆராய வேண்டும் எனவும் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

அவர் என்ன சொல்கிறார்? இந்தியாவுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை இலங்கை மாற்றியதால் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் எதிராக இந்தியா வெற்றி பெற்றது என்கிறீர்களா? ரணதுங்கா நேரடியாக சொல்லாமல் சர்ச்சையை மட்டும் கிளப்பி வருகிறார். இந்த குற்றச்சாட்டுக்கு பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பதிலளிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply