Asia Cup 2023 Ind vs Nep : நேபாளத்தை புரட்டிப் போட்டது இந்தியா

Asia Cup 2023 Ind vs Nep :

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான மோசமான பேட்டிங் செயல்பாட்டிற்காக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டனர். அது மட்டுமின்றி கத்துக்குட்டி அணி நேபாளத்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. பந்துவீச்சில் ஜடேஜா, பேட்டிங்கில் ரோகித் சர்மா, சுப்மான் கில் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

Asia Cup 2023 Ind vs Nep : நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் போட்டி :

முன்னதாக குரூப் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மோசமாக செயல்பட்டது. ரோகித் சர்மா 11 ரன்களும், சுப்மான் கில் 10 ரன்களும், விராட் கோலி 4 ரன்களும் எடுத்தனர்.

இதன் காரணமாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த சில போட்டிகளில் ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதற்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். அதிக அனுபவம் இல்லாத நேபாள அணிக்கு எதிரான போட்டியில், பந்துவீச்சில் தொடக்கத்தில் திணறிய இந்தியா, பின்னர் மீண்டு அந்த அணியை 230 ரன்களுக்கு சுருட்டியது.

ஜடேஜா சாதனை :

இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஜடேஜா மூன்று சாதனைகளை படைத்துள்ளார். ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்டுகளுடன், ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜடேஜா, இர்பான் பதானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளராக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஜெயசூர்யா மற்றும் அப்துர் ரசாக் ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

ரோஹித் சர்மா சாதனை :

மறுபுறம், நேபாளத்திற்கு எதிரான போட்டியில் (Asia Cup 2023 Ind vs Nep) ரோஹித் சர்மா 5 சிக்ஸர்களுடன் 74 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் 10 அரைசதங்கள் அடித்துள்ள ரோஹித், இந்தியாவில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த பெருமையையும், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும், ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய போட்டியுடன் 1101 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மா, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சனத் ஜெயசூர்யா 1220 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply