Asia Cup Cricket 2023 IND Vs PAK : பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது இந்தியா...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி எமர்ஜிங் பிளேயருக்கான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Asia Cup Cricket 2023 IND Vs PAK - இறுதிப் போட்டி

இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை எமர்ஜிங் கிரிக்கெட் போட்டி நேற்று இறுதிப் போட்டியை எட்டியது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது. ஆரம்ப முதலே அதிரடி காட்டிய பாகிஸ்தான் ரன்களை குவித்தது. தாஹிர் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் வெறும் எழுபது பந்துகளில் சதம் விளாசினார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 352 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக லீக் போட்டிகளில் மோதிய போது இந்திய அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தாஹிர் அவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார்.

கடினமான இலக்கு

இதனை அடுத்து மிகவும் கடினமான இலக்கை நோக்கி ஆடியது இந்திய அணி. சாய் சுதர்சன் தற்போதைய ஆட்டங்களில் முக்கிய பார்மில் உள்ளார். அவர் இந்த போட்டியில் ஜொலிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அவரும் சிறப்பாக விளையாடி உள்ளார். இருவரும் மெதுவாக இன்னிங்ஸை தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஏழு ஓவர்களில் 60க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர். இதனால் போட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தேவையில்லாத ஷார்ட் மூலம் சுதர்சன் வெளியேறியது அனைவரையும் ஏமாற்றியது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எவரும் ரன்கள் குவிக்கவில்லை. அபிஷேக் ஷர்மா மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக 50 ரன்கள் அடித்தார்.

மற்ற இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எவரும் சோபிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா 61 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் சற்று நேரம் பொறுப்புடன் விளையாடினார். மற்ற வீரர்கள் எவரும் பொறுப்புடன் விளையாட வில்லை. மிகவும் மோசமான முறையில் அவுட் ஆகி வெளியேறினர்.

யாஸ் துல் 41 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். பின்னர் இறுதியில் இந்திய அணியால் 224 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை  தொடரை கைப்பற்றியது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்திற்கு ஆளாகினர். இந்திய அணி இது போன்ற முக்கியமான போட்டிகளில் சொதப்புவது இது ஒன்றும் புதிதல்ல. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றதுக்கு பிறகு ஐசிசி தொடர்களில் இந்தியா வெல்லவில்லை.

Latest Slideshows

Leave a Reply