Asian Games 2023 India Medals: 100 பதக்கங்களை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை..

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் கபடி அணி இறுதிப் போட்டியில் சீன தைபேயை 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதன்முறையாக 100வது பதக்கம் வென்றது.

Asian Games 2023 India Medals: சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய நாள் முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் 4வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மகளிர் வில்வித்தை :

மகளிர் வில்வித்தை தனிநபர் கலவை பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார். கூட்டு வில்வித்தை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி வென்னம் தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து வில்வித்தை ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

இந்தியாவின் ஓஜாஸ் தங்கப் பதக்கமும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 99ஐ எட்டியது.இதைத் தொடர்ந்து பெண்கள் கபடி பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்த்து விளையாடியது. முதல் பாதி முடிவில் 14-9 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இரண்டாவது பாதியின் கடைசி 5 நிமிடத்தில் சீன தைபே பதிலடி கொடுத்து முன்னேறியது. ஆனால் இந்திய வீரர்களின் அபாரமான ரெய்டு 26-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 25வது தங்கப் பதக்கம் வென்றது. அதுமட்டுமின்றி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கு முன் 70 பதக்கங்கள் பெற்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply