Asian Games 2023 Table Tennis : Hangzhou 2023 இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்

Indian Table Tennis Squad In Hangzhou 2023 :

Hangzhou 2023-இல் 10 பேர் கொண்ட இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியர்  டேபிள் டென்னிஸ் (Asian Games 2023 Table Tennis) ஆடவர் அணி ஆனது ஷரத் கமல் தலைமையிலும் மற்றும் இந்தியர் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணி மனிகா பத்ரா தலைமையியிலும்  நடைபெறுகிறது. 1958 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுத் திட்டத்தில் டேபிள் டென்னிஸ் நுழைந்தது. அதை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டைத் தவிர அனைத்து ஆண்டு  போட்டியிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது.

டேபிள் டென்னிஸில் 2018 இல் மட்டுமே இந்தியா ஆனது ஆசிய விளையாட்டு பதக்கத்தை பெற்றது. டேபிள் டென்னிஸ் பெண்கள் அணி தங்கள் இறுதிக் குழு நிலைப் போட்டிகளில்  உறுதியான வெற்றி பெற்றனர். டேபிள் டென்னிஸ் (Asian Games 2023 Table Tennis) மகளிர் அணி 23.09.2023 அன்று நேபாளத்தை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றது. 11-1, 11-6, 11-8 என்ற கணக்கில் இளம் வீராங்கனை தியா பராக் சித்தாலே என்பவர் சிக்க ஷ்ரேஸ்தாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றார்.

11-3, 11-7, 11-2 என்ற கணக்கில் அய்ஹிகா முகர்ஜி என்பவர் நபிதா ஸ்ரேஸ்தாவை தோற்கடித்து தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். 11-1,11-5,11-2 என்ற கணக்கில் சுதிர்தா முகர்ஜி என்பவர் எவானா மகர் தாபா வை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார். தியா பராக் சித்தாலே, அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தங்கள் எதிரணியினருக்கு ஒரு முறை கூட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. மகளிர் அணி ஆனது Singapore மற்றும் Nepal-டன் போட்டியிடும் குரூப் F-ல் இடம்  பெற்றுள்ளது.

Asian Games 2023 Table Tennis - டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி வெற்றி :

Asian Games 2023 Table Tennis : டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி தஜிகிஸ்தானை 3-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வீழ்த்தியது. 11-8, 11-5, 11-8 என்ற கணக்கில் மானவ் தக்கர் என்பவர் மஹ்முதோவ் அப்சல்கோனை வீழ்த்தி வெற்றி பெற்றார். 13-11, 11-7, 11-5 என்ற கணக்கில் மனுஷ் ஷா என்பவர் உபேதுல்லோ சுல்டோனோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 11-1, 11-3, 11-5 என்ற கணக்கில் ஹர்மீத் தேசாய் என்பவர் இப்ரோகிம் இஸ்மோயில் சோடாவை தோற்கடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆண்கள் அணி ஆனது Singapore, Yemen, மற்றும் Tajikistan-தானுடன் குரூப் F-க்கு ஒதுக்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் தத்தமது பூர்வாங்க குழு நிலைப் போட்டிகளில் வெற்றிபெற்று, அந்தந்த குழுக்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளன (வெண்கலப் பதக்கத்தை வென்றனர்). Gongshu Canal Sports Park Gymnasium கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டி செப்டம்பர் 30 அன்று நடைபெறும். அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 2 ஆகிய இரண்டு நாட்களில் அடுத்த மீதமுள்ள உச்சி மாநாடு நடைபெறும். முன்னதாக டாப்-100 ஒற்றையர் தரவரிசையில் இருந்த ஷரத் மற்றும் சத்தியன், இப்போது தனிப்பட்ட போட்டிகளில் தங்கள் நிலைகளை மேம்படுத்த முயல்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply