Asian Games : கால்பந்தாட்டத்தில் சீன அணியிடம் வீழ்ந்தது இந்தியா

Asian Games :

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games) வரும் 23ஆம் தேதி முதல் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கால்பந்து, கைப்பந்து போன்ற சில குழு விளையாட்டுகள் இனிமேல் நடைபெறுகின்றன. இந்த கால்பந்து போட்டியில் முதல் சுற்றில் 23 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐந்து பிரிவுகளில் நான்கு அணிகளும், ஒரு பிரிவில் மூன்று அணிகளும் உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், மூன்றாவது இடத்தை பிடித்த நான்கு சிறந்த அணிகளும் 16வது சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சீன வீரர்கள் அதிரடியாக விளையாடி கோல் அடிக்க முயன்றனர். ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் குருமித் ஒரு கோல் சேவ் செய்தார்.

அதேபோல் ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் சுனில் கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். இதில் இருந்து ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் சீன வீரர் காவோ முதல் கோலை அடித்தார். அதேபோல் ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அது தவறவிட்டது.

சீனா வெற்றி :

ஆட்டம் இப்படியே செல்ல ஆட்டத்தின் முதல் பாதியில் கொடுக்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் இந்திய வீரர் ராகுல் முதல் கோல் அடித்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் சீனா இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றது. இதை மீண்டும் சமன் செய்ய இந்தியா கடுமையாக போராடியது. கடைசி கட்டத்தில் சீனா அட்டாக் செய்து 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்திய வாலிபால் அணி கடந்த 37 ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. இந்திய மகளிர் கைப்பந்து அணி 1958 மற்றும் 1962ல் முதல்முறையாக வெள்ளி வென்றது. அதன்பின் 1986ல் வெண்கலம் வென்றது.

வாலிபால் போட்டி :

Asian Games : ஆனால் இதன் பிறகு வாலிபால் போட்டியில் இந்தியா எந்தப் பதக்கமும் வெல்லவில்லை. இந்நிலையில் இந்திய அணி கம்போடியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி இன்று தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

Latest Slideshows

Leave a Reply