ASRTU Special Awards : தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கு 17 விருதுகளை ASRTU அறிவித்துள்ளது
TN Government Transport Corporations Receive 17 ASRTU Special Awards :
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 17 விருதுகள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU – Association Of State Road Transport Undertakings) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ASRTU (அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு) மூலமாக வழங்கப்படும் 2022-23ஆம் ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில் 17 விருதுகளுக்கு (ASRTU Special Awards) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தேர்வாகியுள்ளன என தகவல் தெரிவித்துள்ளார்.
ASRTU - ஒரு குறிப்பு :
இந்த ASRTU (அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு) ஆனது 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது இதன் நோக்கம் ஆகும். இந்த ASRTU (அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு) ஆனது மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றது. 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் ஆனது இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ASRTU கூட்டமைப்பு ஆனது அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து விருதுகளை (ASRTU Special Awards) வழங்கி வருகிறது. இந்த ASRTU (அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு) ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் பெற்று வருகின்றன.
விருதுகள் பெறுவதற்கு தேர்வாகியுள்ள பிரிவுகளின் விவரங்கள் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ASRTU மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான மொத்தம் 69 விருதுகளில் 17 விருதுகளை (4-கில் ஒரு பங்கு 25%) பெற்றுள்ளன.
- முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.
- இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.
விருதுகளின் விவரங்கள் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.
- Fuel Efficiency Award – 1000 பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (1000 புறநகர் பேருந்துகளுக்குள்) முதல் இடம்.
- Road Safety Award – சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் பேருந்திற்குள்)
- Tyre Performance Award-Urban – பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காக (நகர்ப்புற பிரிவு)
- Tyre Performance Award-Rural – பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காக (கிராமப்புற பிரிவு)
- Vehicle Utilization Award-Rural – வாகன பயன்பாட்டிற்காக (கிராமப்புற பிரிவு)
- Urban Vehicle Utilization Award – வாகன பயன்பாட்டிற்காக (நகர்ப்புற பிரிவு).
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.
- Fuel Efficiency Award – பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்)
- Tyre Performance Award-Rural – உருளிப்பட்டை செயல்திறனுக்காக (கிராமப்புற பிரிவு)
- Tyre Performance Award- Urban – பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காக (நகர்ப்புற பிரிவு)
- Vehicle Utilization Award-Urban – வாகன பயன்பாட்டிற்காக (நகர்ப்புற பிரிவு)
- ASRTU Rebate Award – ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.
- Vehicle Utilization Award- Rural – வாகன பயன்பாட்டிற்காக (கிராமப்புற பிரிவு)
- Employee Productivity Award-Rural – பணியாளர் செயல் திறனுக்காக (கிராமப்புற பிரிவு)
- Digital Transaction Award-Rural – பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (கிராமப்புற பிரிவு)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.
- Road Safety Award :
- நகர்ப்புறம் – 1000-க்கும் குறைவான பேருந்துகள் சாலை பாதுகாப்பிற்காக
- புறநகர் – 1001 – 4000 பேருந்துகள் சாலை பாதுகாப்பிற்காக
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது.
- ASRTU Rebate Award – ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக மொத்தம் 69 விருதுகளில் 17 விருதுகள் பெறுவதற்கு (ASRTU Special Awards) தேர்வாகியுள்ளது. தற்போது, தமிழ்நாடு போக்குவத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும், எனது வழிக்காட்டுதல்படியும் சிறப்பாக செயல்படுகிறது.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்