Asteroids In Space Could Produce Food : விண்வெளியில் உள்ள சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

விண்வெளிக்கு செல்லும் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து உணவுகளும் பூமியிலிருந்து தான் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் தேவைக்கு அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் தற்போதுவரை அளவுடன் சாப்பிட்டு வருகின்றனர். விண்வெளி வீரர்களின் உணவு பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் உணவு தயாரிப்பது எப்படி என ஒரு ஆய்வை நடத்தி வந்தனர். தற்போது இவர்களின் ஆய்வின் முடிவில் “பென்னு” போன்ற சிறுகோள்களிலிருந்து உணவினை தயாரிக்க முடியும் (Asteroids In Space Could Produce Food) என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

1.2 கிலோகிராம் உணவு (Asteroids In Space Could Produce Food)

விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர் ஒரு நாளைக்கு அவரின் உடல் எடை மற்றும் ஆற்றல் நிலைகளை பராமரிக்க சுமார் 1.2 கிலோகிராம் அளவுள்ள உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் பூமியில் இருப்பவர்களை விட விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. இதற்கு காரணம் விண்வெளி நிலையத்தில் சத்தம், அதிர்வு, வெப்பநிலை மாற்றங்கள், எடையின்மை, காஸ்மிக் கதிர்வீச்சு உள்ளிட்ட தனித்துவமான அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். இதனால்தான் அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியமாகிறது. இத்தனை ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அனைத்தும் விண்வெளி வீரர்களுக்கு பூமியிலிருந்து எடுத்து செல்லப்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். 

சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் செய்வது என்பது ஒருவகையில் சாத்தியம் என்றாலும் இது சிக்கலானது மற்றும் இடப்பற்றாகுறையை ஏற்படுத்தும். வரும் காலங்களில் சூரிய மண்டலத்தின் வெளிப்புறப் பகுதிக்கு அப்பாலிருக்கும் பயணங்களுக்கு தேவையான உணவை (Asteroids In Space Could Produce Food)  “பென்னு” என்ற சிறுகோளிலிருந்து பெறமுடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி ஆய்வு

வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் நுண்ணுயிரிகள் மற்றும் சிறுகோளில் இருக்கும் கரிம சேர்மங்களைப் பயன்படுத்தி உணவை உற்பத்தி (Asteroids In Space Could Produce Food) செய்வதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வின் முடிவில் ஆக்ஸிஜன் இல்லாத சூழ்நிலைகளில் சிறுகோளில் காணப்படும் கரிமச் சேர்மங்களை உடைப்பதற்கு அதிக வெப்பத்தை பயன்படுத்த வேண்டும் இது ‘பைரோலிசிஸ்’ என அழைக்கப்படுகிறது.

பென்னு சிறுகோள்

இதன் காரணமாக உடைந்த சிறுகோளில் உற்பத்தியாகும் ஹைட்ரோகார்பன் நுண்ணுயிரிகளுக்கு உணவாகிறது. இந்த நுண்ணுயிரிகள் கரிமப் பொருட்களை உட்கொண்டு விண்வெளி வீரர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உயிரியலை வழங்குகிறது. மேலும் இவர்களின் ஆய்வின்படி 10.5% நீர் மற்றும் கரிமப் பொருட்களைக் கொண்ட ‘கார்பனேசியஸ் காண்டிரைட்’ என அழைக்கப்படும் பென்னு சிறுகோள் மீது ஆராய்ச்சியாளர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.          

இதன் முடிவில் சிறுகோள்கள் 17000 வீரர்களின் வாழ்நாளை அதிகரிக்க தேவையான கலோரிகளுடன் 6550 மெட்ரிக் டன் அளவுள்ள உண்ணக்கூடிய உயிர்ப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தலாம் (Asteroids In Space Could Produce Food) என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் விஞ்ஞானிகள் சிறுகோள்கள் விண்வெளி பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply