Asus நிறுவனத்தின் Asus ROG Phone 8 ஸ்மார்ட்போன் ஜனவரி 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம்

ஆசஸ் நிறுவனத்தின் ஆர்ஓஜி போன் 8 (Asus ROG Phone 8) மாடல் ஆனது வரும் ஜனவரி 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய Rog போனின் டீசரை ஆசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ஓஜி போன் 8 மாடல் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சிறப்பம்சங்கள் (Asus ROG Phone 8 Specifications) :

  1. Asus ROG Phone 8 Display : 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் அறிமுகமாகிறது. மேலும் எச்டிஆர் 10 ஆதரவு, 165 Hz  ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் 240 Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை போனின் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மடலானது அறிமுகமாகிறது. சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் விற்பனைக்கு வருகிறது. அதிலும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என ஆசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

  2. Asus ROG Phone 8 Storage : 12GB RAM + 256GB மெமரி மற்றும் 16GB RAM + 512GB மெமரி மற்றும் 24GB RAM + 1Tb மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம்.

  3. Asus ROG Phone 8 Camera : 50MB சோனி ஐஎம்எக்ஸ்890 பிரைமரி சென்சார் (Sony IMX890 Primary Sensor) + 13MB அல்ட்ரா வைடு லென்ஸ் + 32MB டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல்.

  4. Asus ROG Phone 8 Battery : 6000MAh பேட்டரி உடன் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் ஆசஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய குவிக் சார்ஜ் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளன. ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 ஆனது இந்தியாவில் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் எனவும்  ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 போனில் இருக்கும் என்றும் ஆன்லைனில் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply