பெங்களூர் சிக்னல்களில் ATCS

பெங்களூர் சிக்னல்களில் வாகன நெரிசலை தவிர்க்க மற்றும் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த ATCS :

MODERATO அப்ளிகேஷன் மூலமாக, ஏரியா டிராஃபிக் கண்ட்ரோல் சிஸ்டத்தின் (ATCS) அடிப்படையில் செயல்படும் சிக்னல்கள் பெங்களூரில் விரைவில் அறிமுகமாகிறது. இது ஒரு அதிநவீன ஜப்பான் தொழில்நுட்பம் ஆகும். இந்த  அதிநவீன ஜப்பான் தொழில்நுட்பம் மூலம், வாகன நெரிசலுக்கு ஏற்ப சிக்னல் நேரங்கள் தானாகவே மாறிக்கொள்ளும். 2014ல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு ஜூலை 2021ல் தான் இதன் பணிகள் ஆனது வேகம் பெற்றன. தற்போது இந்த திட்டம் ஒரு வடிவத்திற்கு வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் ஆனது முடிந்ததும் பெங்களூரின் சிக்னல்கள் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு இந்த ஆட்டோமேட்டிக் சிஸ்டம் ஆனது சிக்னல்கள் போக்குவரத்து போலீசாரால் இயக்கப்படும்.

உலகளவில் நெரிசல் மிகுந்த நகரங்களில் 6வது நகரம் பெங்களூர் :

  • கடந்த 2023 ஆம் ஆண்டில் பெங்களூர் ஆனது உலகளவில் நெரிசல் மிகுந்த நகரங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளதாக டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிபுணரான டாம் டாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
  • பெங்களூரில் காலை மற்றும் மாலை நேரங்களில், அலுவலகங்களுக்குச் செல்வோர் மணிக்கணக்கில் டிராபிக்கில் மாட்டிக்கொள்வது வழக்கம். சிக்னல்களில் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த மற்றும் வாகன நெரிசலை கிளீயர் செய்ய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ATSCS செயல்பாடு :

  • ATSCS செயல்பாடு மூலம் எல்லா பகுதிக்கும் சமமான கால அளவிற்கான ரெட் சிக்னல் விழுவது தவிர்க்கப்படும். சாலையின் எந்தப் பக்கத்தில் அதிக வாகனங்கள் வரிசையில் நிற்கின்றனவோ, அந்தப் பகுதியில் வாகன நெரிசலை கிளீயர் செய்ய, அப்பகுதிக்கு கூடுதல் நேரம் கிரீன் சிக்னல் ஆனது வழங்கப்படும். இதன் மூலம், சமமான கால அளவிற்கு ரெட் சிக்னல் 2 பகுதிக்கும் விழுவது தவிர்க்கப்படும்.
  • பெங்களூரில் கிட்டத்தட்ட 40,000 போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன. இந்த 40,000 போக்குவரத்து சந்திப்புகளில் சுமார் 400 சாலை சந்திப்புகள் சிக்னல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து காவலர்களால் 600 சந்திப்புகளில் சிக்னல்கள் இன்றி ஒழுங்குபடுத்தப்படுகிறது.
  • பெங்களூர் நகரின் முக்கிய சாலை சந்திப்பு சிக்னல்கள் தற்போது ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் இயங்கப்பட உள்ளன.

Latest Slideshows

Leave a Reply