Athipalam Benefits In Tamil: அத்திப்பழம் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

Athipalam Benefits In Tamil: அத்திப்பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அத்தி மரத்தின் இலை, காய், பழம், பட்டை, பால் என அத்தி மரத்தில் உள்ள அனைத்துமே ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டது. அத்திப்பழம் மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. அத்திப்பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. இவை சிமை அத்தி மற்றும் நாட்டு அத்தி என்றும் அழைக்கப்படுகின்றன. அத்தி பழங்கள் மரத்தின் பல்வேறு இடங்களில் கொத்துக் கொத்தாக தொங்கும். ஒரு அத்தி மரத்தில் 180 முதல் 300 அத்திப்பழங்கள் வரை காய்க்கும். அத்தி பழத்தில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களை தற்போது காணலாம்.

அத்திப்பழம் நன்மைகள் (Athipalam Benefits In Tamil)

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

Athipalam Benefits In Tamil:  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த அத்திப்பழம் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்தப் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சரியாகக் கட்டுப்படுத்தலாம்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க

Athipalam Benefits In Tamil: அரிக்கும் தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் மருந்தாக செயல்படுகிறது. அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம், தோலில் வெள்ளை புள்ளிகள், தொழுநோய் போன்ற பல பிரச்சனைகள் குணமாகும். மேலும் இவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வர சருமம் பொலிவோடும், முகம் பிரகாசத்துடனும் இருக்கும்.

வயதான தோற்றம் ஏற்படாமல் காக்க

Athipalam Benefits In Tamil: அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்ட்டுகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவியாக இருக்கும். இச்செயலால் தினமும் அத்திப்பழத்தை உட்கொள்பவருக்கு விரைவில் வயதான தோற்றம் ஏற்படாது. இதை அத்திப்பழத்தின் சிறந்த குணமாக குறிப்பிடலாம்.

முடி சிறப்பாக வளர

Athipalam Benefits In Tamil: அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க் சத்து முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக மாதவிடாய் நிற்கக்கூடிய காலத்தில் பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக ஏற்படும். அந்த சமயங்களில் அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை தவிர்க்கலாம். அத்திப்பழத்தில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு அவசியமானது. இதில் உள்ள மெக்னீசியம் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அத்திப்பழம் சாப்பிடுபவர்களுக்கு முடியின் நீளம் அதிகரிப்பது உறுதியாகும்.

இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது

அத்தி பழத்தை அதிகம் சாப்பிடுவது உடலில் இரத்த உற்பத்தியை மேம்படுத்துகிறது. எனவே இரத்த சோகை போன்ற நோய்கள் இதன் மூலம் துரத்தப்படும்.

கல்லீரல் வீக்கம் குணமடைய

இந்த பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். குறிப்பாக கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு இருந்தால், அது முற்றிலும் நிவாரணம் அடையும்.

பித்த பிரச்சனை தீரும்

அத்தி மரத்தின் இலைகளை உலர செய்து பிறகு இவற்றை உலர்த்தி பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

இரத்த அழுத்தம் சீராக இருக்க

Athipalam Benefits In Tamil: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்க வேண்டும். இரத்த அழுத்தம் அதிகமாகும் பட்சத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வழிவகுக்கும். இதற்கு அத்திப்பழம் தீர்வாக உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் சாதனவையாகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

அத்திப்பழத்தால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

Athipalam Benefits for Men In Tamil: இன்று பல திருமணமான தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றேடுப்பத்தில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குழந்தை பிறக்க ஆண், பெண் இருவரின் கருவளம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய மோசமான உணவுப்பழக்கம், புகைபிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் பல காரணங்களால் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமின்றி உள்ளது. இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவாக உள்ளது. இதுதவிர சில ஆண்களுக்கு செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக உள்ளது.

இப்படி ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வாக சுவையான அத்திப்பழம் உள்ளது. இந்நிலையில் உங்கள் பாலியல் ஆரோக்கியம் மற்றும் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உங்கள் தினசரி உணவில் அத்திப்பழங்களை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.

Latest Slideshows

Leave a Reply