Atlee's Condition To Allu Arjun Movie Producer : அல்லு அர்ஜுன் படத்தை இயக்கும் அட்லீ போட்ட கண்டிஷன்

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கும் அட்லீ, படத்தின் தயாரிப்பாளருக்கு முக்கியமான கண்டிஷன் போட்டுள்ளதாக (Atlee’s Condition To Allu Arjun Movie Producer) கூறப்படுகிறது. ராஜா ராணி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தனது முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அட்லீக்கு, விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று மாஸ் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று படங்களும் மாஸ் ஹிட் ஆன பிறகு, அட்லியை ஜவான் என்ற பெரிய பட வாய்ப்பு அணுகியது. அட்லி படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். அதுவும் பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் படத்தில் ஹீரோவாக நடித்தார். சுமார் 3 வருடங்கள் படத்திற்காக கடுமையாக உழைத்த அட்லீ ஜவான் படத்தை பக்கா கமர்ஷியல் படமாக உருவாக்கினார். அவரது மேக்கிங் ஸ்டைலை பார்த்து பாலிவுட் அதிர்ச்சி அடைந்தது. ஜவான் படத்தை இந்தி திரையுலகினராலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Atlee's Condition To Allu Arjun Movie Producer :

ஜவான் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அட்லீ கால்ஷீட்டிற்காக பாலிவுட்டே காத்திருந்த நிலையில், அவர் அடுத்ததாக டோலிவுட்டுக்கு சென்றுவிட்டார். தெலுங்கில் மாஸ் நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார் அட்லீ. படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அட்லி போட்ட கண்டிஷன் (Atlee’s Condition To Allu Arjun Movie Producer) குறித்து டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லீ ஏற்கனவே தனது சம்பளத்தை ரூ.60 கோடியாக உயர்த்திவிட்ட நிலையில், படத்தின் வசூலில் இருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என நிபந்தனையும் விதித்துள்ளார். பொதுவாக ஹீரோக்கள் தான் இப்படி பங்குகளை கேட்பார்கள். சமீபத்தில் ரஜினிகாந்தும் ஜெயிலருக்கு ஒரு பங்கு வாங்கினார். தற்போது இதே மாதிரி பேரம் பேசி டோலிவுட்டையே அதிர வைத்துள்ளார் அட்லீ.

Latest Slideshows

Leave a Reply