Australia Last Ball Victory : ஆஸ்திரேலியா அணி கடைசி பந்தில் திரில் வெற்றி

NZ vs AUS :

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை (Australia Last Ball Victory) பதிவு செய்தது. ஆஸ்திரேலியா நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

சி.எஸ்.கே வீரர்கள் :

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் விரைவில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பின், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிஎஸ்கே வீரர்கள் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சதமடித்தனர். ஆஸ்திரேலிய வீரர்களும் கட்டுப்பாடாக பந்துவீசத் தொடங்கினர். இருப்பினும் சில பந்துகளை சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். குறிப்பாக கான்வே கடந்த சில போட்டிகளில் ரன் சேர்க்க போராடி வருகிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சற்று கலக்கம் அடைந்தனர். ஏனெனில் சிஎஸ்கே வெற்றி பெற கான்வே தொடக்க வீரராக பிரகாசிக்க வேண்டும். ருத்ராஜ்-கான்வே ஆட்டம் மிக முக்கியமானது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கான்வே தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், இரண்டு இமாலய சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல் தற்போது சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ள ரச்சின் ரவீந்திரா பேட்டிங்கில் அதிரடி காட்டினார். குறிப்பாக அவர் ஆறு சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் 29 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். முதல் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஆனால் அடுத்த 19 பந்துகளில் ரச்சின் ரவீந்திரா 54 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், கிளென் பிலிப்ஸ் 19 ரன்களும், மார்க் சாப்மேன் 18 ரன்களும் எடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் டேவிட் வார்னர் 3 சிக்ஸர்கள் அடித்து 32 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதேபோல் மேக்ஸ்வெல்லும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி நூறு ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்துக்கு சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட் மற்றும் ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஸ் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Australia Last Ball Victory :

ஒரு கட்டத்தில் மிட்செல் மார்ஸ் தனது பழைய அதிரடியை காட்டினார். அவர் 44 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். அதேபோல் டிம் டேவிட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். கடைசி 3 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணி இருந்தது. அணி டேவிட் இருபதாவது ஓவரின் நான்காவது பந்தில் ஒரு சிக்ஸரும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்களும் அடித்தார், வெற்றிக்கு கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் டிம் டேவிட் அபாரமாக பவுண்டரி அடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு (Australia Last Ball Victory) வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply