Australia Vs England 5th Test : வரலாறு படைக்குமா ஆஸ்திரேலியா அணி? டிரா செய்யுமா இங்கிலாந்து?

Australia Vs England 5th Test - ஆசஸ் டெஸ்ட் தொடர் :

வரலாற்று சிறப்பு கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் பின்னலையில் உள்ளது. கடந்த ஆசஸ் தொடர் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இந்த தொடரில் மீண்டும் ஆஸ்திரேலியா அணி கோப்பையை தக்க வைத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றி விடும். ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர் டிராவில் முடிவடையும். இதனால் கடந்த தொடரில் வெற்றி பெற்றதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி தக்க வைத்துக் கொள்ளும்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. நான்காவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நான்காவது போட்டியில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணிக்கு பெரும் ஏமாற்றமாகும். இதனால் பல்வேறு முன்னணி வீரர்கள் இங்கிலாந்து அணியை விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து மனம் திறந்த ஸ்டோக்ஸ் அவர்கள் டெஸ்ட் தொடரை இழந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அடுத்த போட்டியை வெல்வதுமே எங்கள் இலக்கு என தெரிவித்திருந்தார். ஏனெனில் இந்த போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும் 2-2 என்ற கணக்கில் டிரா ஆகிவிடும்.

இந்த நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோற்றால் இது பெரும் பின்னடைவாக கருதப்படும். ஏற்கனவே பேஸ் பால் வியூகத்தை ஆஸ்திரேலியா அணி சுக்கு நூறாக உடைத்ததாக ரசிகர்கள் வெறுப்பேற்றி கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஐந்தாவது போட்டி தன்னுடைய பலத்தை நிரூபிக்க கட்டாயம் இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும். இந்த போட்டிய பொருத்தவரை இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஆஸ்திரேலியா அணி சிறிது மாற்றங்கள் ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகின்றன. எனவே இரு அணிகளுக்கு இடையான இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் இன்று நடைபெற உள்ளது.

இந்தியா தொடர் :

தொடர் முடிவு அடைந்தவுடன் இங்கிலாந்து அணி இந்தியாவில் வந்து ஐந்து டெஸ்ட் தொடர் கொண்ட போட்டி விளையாட உள்ளது. மெக்கல்லம் பயிற்சியாளராக வந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுடன் விளையாட உள்ள முதல் தொடர் இதுவாகும்.

Latest Slideshows

Leave a Reply