Australia Won The Series : இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆக்லாந்து :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என (Australia Won The Series) முன்னிலை பெற்றது. இரண்டாவது டி20 ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 5 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் இம்முறை இரண்டு சிக்ஸர்களை அடித்து 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 6 ரன்களிலும், ஜோஸ் இங்கிலீஷ் 5 ரன்களிலும், டிம் டேவிட் 17 ரன்களிலும், மேத்யூ வெட் 1 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 138 ரன்களுக்கு தடுமாறியது. இதையடுத்து களம் இறங்கிய பேட் கம்மின்ஸ் அபாரமாக விளையாடி 5 பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 174 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் லோகி பெகுர்சன் 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சி.எஸ்.கே அணியின் மிட்செல் சான்ட்னர் நான்கு ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 6 ரன்களிலும், வில் யங் 5 ரன்களிலும், சிஎஸ்கே அணியின் மிட்செல் சான்ட்னர் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Australia Won The Series :

ஒரு கட்டத்தில் 29 ரன்கள் சேர்ப்பதற்குள் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு, கிளென் பிலிப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் யாரும் அவருக்கு துணை நிற்கவில்லை. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 17 ஓவர்கள் முடிவில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தொடரை 2-0 என (Australia Won The Series) கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் ஆடம் சம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Latest Slideshows

Leave a Reply