Autobiography Of A Yogi - ஒரு யோகியின் சுயசரிதம்

ஒரு யோகியின் சுயசரிதம்! இந்த புத்தகத்தில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது. நிறைய பிரபலங்கள் இந்த புத்தகத்தைப் பற்றி கூறுவது. மனிதனாக பிறந்தால் வாழ்க்கையில் இந்த புத்தகத்தை ஒரு முறையாவது படிக்க வேண்டும். என்று கூறுகின்றனர். அப்படி யாரெல்லாம் இந்த புத்தகத்தை அறிவுறுத்துகிறார்கள் என்றால் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னால் CEO ஸ்டீவ் ஜாப்ஸ், கிரிக்கெட் விளையாட்டு வீரர் வீராட் கோலி, நடிகர் ரஜினிகாந்த் போன்ற நிறைய பிரபலங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இப்புத்தகத்தை எழுதியவர் பரமஹம்ச யோகானந்தர். இவருடைய ஆன்மிக பயணங்களை பற்றி தான் இந்த புத்தகம் முழுமையும் பேசப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் இருந்து பல வாழ்க்கை பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். சாதாரணமான சலிப்பூட்டும் கதையாக இல்லாமல், ஆழமாக சிந்திக்கக்கூடிய கருத்துக்கள், நகைச்சுவை போன்றவை கலந்துதான் இந்த புத்தகம் எழுதப் பட்டுள்ளது. இந்த புத்தகத்தை 30 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர்.

Autobiography Of A Yogi - அறிமுகம்

யோகானந்தா இந்தியாவில் கோராக்பூரில் உள்ள முகுந்தாலால் கோஷ் என்னும் இடத்தில் பிறந்தார். இப்படி இவருடைய சிறிய வயதில் குடும்ப வாழ்க்கையில் ஆரம்பித்து தன்னுடைய குருவை கண்டு பிடித்து எப்படி துறவி ஆகிறார் என்பது வரை தன்னுடைய முழு கதையையும் இந்த புத்தகத்தில் முழுமையாக எழுதியுள்ளார். இதிலுள்ள சில முக்கிய விஷயங்களை பின்வருமாறு விரிவாக காணலாம்.

Self Realization (சுய உணர்தல்):

நம்மை நாம் முழுமையாக உணர்வது எந்த பிரச்சனைகளும் இல்லாமல், கவலைகளும் இல்லாமல் முழுமையான நிலையை அடைவதுதான் சுய உணர்தல் (Self Realization). கடவுள் எங்கேயும் எப்போதும் நிறைத்திருக்கிறார். நாமும் கடவுளின் ஒரு பகுதிதான். அவர் நம்முடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதற்காக வணங்க வேண்டும் என்று கிடையாது. நமக்குள்தான் கடவுள் இருக்கிறார். நம்முடைய மனம், உடல், ஆன்மா இந்த மூன்றையும் முழுமையாக புரிந்து கொண்டால் சுய உணர்தலை அடைய முடியும் என்று ஆர்தர் கூறுகிறார்.

Living A Life With Happiness (மகிழ்ச்சியுடன் வாழ்வது):

கடந்த காலத்தை எல்லாம் மறந்து நிகழ்கால நிமிடத்தை நிம்மதியாக வாழ வேண்டும். உங்கள் கண் முன்னே தோன்றுவதை பார்த்து ரசிக்க வேண்டும். எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டாம். உங்கள் எதிர்காலத்தை அதுவே பார்த்துக் கொள்ளும். நீங்கள் இந்த உலகிற்கு பொழுதுபோக்கிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வந்திருக்கிறீர்கள் என்றும் ஆர்தர் பரமஹம்ச யோகானந்தா அழகான வரிகளால் சொல்லி இருக்கிறார். மற்றவர்களை அமைதியான பேச்சின் மூலமாகவும், சரியான அறிவுரைகளின் மூலமாகவும் சந்தோஷப்படுத்துவது தான் உண்மையான மகத்துவம். மற்றவர்களை கேலி செய்வதும், இழிவாக பார்ப்பதும், கெட்ட அறிவுரைகளை சொல்வது போன்றவைகள் எல்லாம் தவறான செயல்.

கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். அவை எதுவும் மாறப்போவது இல்லை. எதிர்காலத்தையும் மறந்து விடுங்கள் அது எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் கட்டுப்பாடோடு நிம்மதியாக வாழுங்கள். சாதாரண அன்பில் சுயநலம் இருக்கும் அதில் ஏதாவது ஆசைகள், தேவைகள், திருப்திகள் எல்லாம் எதிர்பார்க்கப்படும்.  ஆனால் தெய்வீக அன்பில் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இருக்காது. எந்த ஒரு எல்லையும் இருக்காது, எந்த ஒரு மாற்றமும் இருக்காது. வாழும் வாழ்க்கையும் சுயநலமில்லாத அன்பை தேடி கண்டுபிடித்து சந்தோஷமாக வாழுங்கள்.

Living in purpose and being purposeful: (நோக்கத்துடன் வாழ்தல் மற்றும் நோக்கத்துடன் இருத்தல்):

எவ்வளவு ஆழமாக வாழ்க்கையை நாம் புரிந்துக் கொள்கிறோமோ அவ்வளவு ஆழமாக நம் வாழ்க்கைக்கான நோக்கத்தை  கண்டுபிடிக்க முடியும். நமக்கு எப்போது சுயநினைவு தோன்றும் நம் உடலுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் மட்டுமே நமக்கு சுயநினைவு  அதிகமாக வேலைசெய்யும். இதே போன்று என்றைக்கு நாம் மூச்சு விடுவதில் பிரட்சனை வருகிறதோ அப்போதுதான் இன்னும் உணருவோம்.

மூச்சு விட்டுத்தான் உயிர் வாழ்கிறோம் என்று மறந்த மனிதன் ஆஸ்துமா நோய் வந்ததும் மூச்சை பற்றி மட்டுமே சிந்திப்பான். அப்போது தான் நம்முடைய உணர்வு அதாவது (Conscious) இயங்கும். இதனால் நம் உடலுக்குள் நடக்கின்ற விஷயங்கள், மூச்சு விடுவது இதெல்லாம் ஆழ்மனதால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது.

நாம் தூங்கும்போதும் கூட ஆழ்மனமானது அதன் வேலையை செய்துகொண்டே இருக்கும். அந்த ஆழ்மனதை கட்டுப்படுத்தும் விஷயங்களில் சிறு பாதிப்பு வரும்போது தான் நாம் உணர்கிறோம் அதாவது (Consious) ஆகிறோம். அப்போதுதான் நாம் ஒரு குறிக்கோளற்ற வழுக்கை வாழ்கிறோம் என்பது புரியும்.

நீங்கள் இந்த உலகத்திற்கு தனியாக வந்தீர்கள் இங்கே நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு சிந்தனைக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் மட்டும்தான் பொறுப்பு. உங்களால் மட்டும்தான் அதை மாற்றிக்கொள்ள முடியும். வாழ்க்கையை வாழும்போது அதற்கென ஒரு குறிக்கோள் வேண்டும். ஒரு நோக்கத்தோடு மட்டும்தான் வாழ்க்கையை வாழ வேண்டும்.  

Being in service (சேவையில் இருத்தல்):

மற்றவர்களை தாழ்த்தி உயர வேண்டும் என்று சிலர் முயற்சி செய்வார்கள். ஆனால் அப்படி செய்தால் அது அவர்களுக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். என்பதை, அவர்கள் அறிவதில்லை. நீங்கள் உங்கள் Conscious மனதால் என்ன நினைக்குறீர்களோ அது உங்கள் ஆழ்மனதில் பதிந்து நீங்கள் நினைப்பதுதான் பிரதிபலிக்கும்.

ஒரு மனிதன் செல்ப் ரியலிசேஷன் அடைந்து விட்டான் என்றால் அவன் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் பல நேர்மறையான ஆற்றலை வெளியிடுகிறான். அவனுக்கு பிரட்சனைகள் வருவதும் குறைவாக இருக்கும். நம் மனதில் இருக்கும் காந்த சக்திதான் சரியான நண்பர்களை ஈர்க்க உதவுகிறது. அந்த சக்திக்கு சுயநலம் என்றால் என்ன? என்பதும் தெரியாது. மற்றவர்களை பற்றி தான் அது முதலில் யோசிக்கும். மற்றவர்களுக்காக நீங்கள் வாழவேண்டும் என்று நினைத்தால் அவர்களும் உங்களுக்காக வாழ்வார்கள். 

யாருக்கும் நீங்கள் சொந்தமானவர்கள் இல்லை என்று நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். யாரும் உங்களுக்கு சொந்தம் கிடையாது. ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் வாழ்வார்கள். எல்லாரும் எனக்குதான் சொந்தம், எல்லாரையும் அடிமைப் படுத்துவேன், எல்லாரும் எனக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது தவறு. மற்றவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து எல்லாருக்கும் சேவை செய்து வாழுங்கள்.

உங்கள் சேவை எல்லாருக்கும் பயனுள்ளதாக இருந்தால், அவர்கள் திருப்தி அடைந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கான நேர்மறை சக்திகளை வெளியிடுவார்கள். அதன் மூலமாக இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அதிக நேர்மறை சக்திகளையும், மகிழ்ச்சிகளையும் கொடுக்கும். இந்த பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் அனைவருமே சேவை செய்ய வேண்டும். அது கடமையும் கூட யாரையும் அதிகாரம் செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். பிறகு செய்தாலுமே அவை எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும். 

The law of success (வெற்றியின் சட்டம்):

வெற்றிக்கென்று பல சட்டம் இருக்கிறது. நம் ஆன்மாவுடன் சக்திகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வம், சந்தோஷம் எல்லாவற்றையுமே உருவாக்க முடியும். நம் எண்ணங்களுக்கு அதிக சக்திகள் இருக்கு என்பது நமக்கு தெரியும். எண்ணங்கள் தான் நம் மகிழ்ச்சி, தோல்வி, வெற்றி எல்லாவற்றையும் நிர்ணயிக்கும். உங்களுடைய எண்ணம் வெற்றியை நோக்கி இருந்தால் வெற்றிதான் கிடைக்கும். இதுதான் எண்ணங்களின் சக்தி.

உங்கள் மனம் முழுவதும் நேர்மறையான எண்ணங்களை வைத்து முழுமை படுத்தி இருந்தாலும், ஒரேயொரு எதிர்மறை எண்ணம் உள்ளே நுழைந்தால் உங்கள் மனம் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்துவிடும். எப்போதுமே நேர்மறையான சிந்தனையை மட்டும் சிந்தியுங்கள். எதிர்மறை சிந்தனைகள் ஏற்பட்டாலும் அவற்றை தவிர்த்து விடுங்கள். சரியான சிந்தனைகளையே மேற்கொண்டால் உங்களுக்கு தேவையான இலக்கை அடைய முடியும்.

நேர்மறை எண்ணங்களோடு மன உறுதியும் மிக முக்கியம். நேர்மறை சிந்தனை மற்றும் மன உறுதியோடு வெற்றிக்கான பணியை மேற்கொள்ளும்போது வெற்றியை கண்டிப்பாக அடைய முடியும். சுயநினைவோடு நம்முடைய மன உறுதியை கையாள வேண்டும். அப்போதுதான் அது நம் ஆழ்மனதிலும் பதிய வைக்கும். வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும். நம் மனம் தான் எல்லாவற்றிற்குமான படைப்பாளி.

மனதில் உதிக்கும் எண்ணங்கள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் வைத்துதான் இந்த பிரபஞ்சம் நமக்கு தேவையான விஷயங்களை கொடுக்கும். மன உறுதியோடு செயல்படும் போதுதான் சரியான பாதையில் பயணிக்க முடியும். உங்களின் மனதை அமைதியாக வைக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எது தேவையோ அதை அடைவதற்கு எல்லா அழுத்தங்களையும் பயன்படுத்துங்கள். நான் கண்டிப்பாக அடைந்தே தீருவேன் என்னும் எண்ணத்தை உங்கள் மனதில் வைக்க வேண்டும்.

பயத்தை மட்டும் நாம் என்றைக்கும் ஆள விடக்கூடாது. நம் மன உறுதியின் எதிரி பயம்தான். நரம்புகளை எல்லாம் பதற வைத்து மொத்த உடலையும் பலவீனம் ஆக்கிவிடும். பயம் என்றைக்கும் வெற்றியின் பாதையில் நம்மை அழைத்து செல்லாது. நம் மன உறுதியைதான் பலவீனம் ஆக்கும். மனதை சுருக்கி இதயத்தை பலவீனம் ஆக்கிவிடும்.

கடவுளை நோக்கி நாம் நம் உணர்வுகளை செலுத்தும்போது பயமானது நம்மிடம் நெருங்காது என்று ஆர்தர் யோகானந்த கூறுகிறார். நமக்கு வரும் தடைகள் எல்லாவற்றையும் தைரியம், நம்பிக்கை இதை வைத்து முன்னேறி வர முடியும். சக்திகள் நிறைந்த ஆத்மாக்களை வைத்து உங்களை நீங்களே கட்டமையுங்கள். உங்களுடைய எல்லா பிரட்சனைகளையும் சரிசெய்வதற்கான அதிபுத்திசாலித்தனமும் உங்களுக்கு கிடைக்கும். இதை பற்றி தான் ஆர்தர் யோகானந்தா Autobiography Of A Yogi  (ஒரு யோகியின் சுயசரிதம்) என்னும் புத்தகத்தில் பேசியுள்ளார்.

Conclusion (முடிவுரை):

யோகானந்தா சிறிய வயதில் ஆரம்பித்து கடவுளை அடைந்த வரையில் தன்னுடைய வாழ்க்கையில் முழு பயணத்தையும் இந்த புத்தகத்தில் எழுதியது மட்டுமின்றி தன் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களையும் மற்றவர்களுக்காக பகிர்ந்திருக்கிறார்.

கற்றதையும் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இந்த புத்தகத்தைப் படித்த நிறைய நபர்கள் ஆத்மா விழுப்புநிலையை உணர்ந்ததாகவும், வாழ்க்கையில் தெளிவு கிடைத்ததாகவும் தங்களுக்குள் இருந்த நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்ததாகவும் இந்த புத்தகத்தைப் பற்றி விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள். வெறும் மதம் சார்ந்த புத்தகமாக எழுதாமல்.

எல்லாருடைய வாழ்க்கையிலும் நல்ல வழியை காட்டும் வகையில்தான் இந்த ஒரு யோகியின் சுயசரிதம் என்னும் புத்தகத்தை ஆர்தர் பரம ஹம்ச யோகானந்தா எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் வெற்றிப்பாதையை அடைவதற்கும் இந்த புத்தகத்தில் நிறைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. யோகானந்தா சொன்னது போல் நேர்மறையான எண்ணங்களை சிந்தித்து மன உறுதியுடன், தைரியமாக வெற்றிப்பாதையில் பயணித்து உங்கள் இலக்கை அடையுங்கள்.

Latest Slideshows

Leave a Reply