Aval Peyar Rajni Movie Review : அவள் பெயர் ரஜினி திரைப்படத்தின் திரைவிமர்சனம்

Aval Peyar Rajni Movie Review : வினில் ஸ்கரியா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபோ மோனிகா ஜான், அஷ்வின் குமார், கருணாகரன், சைஜு குரூப், ஷான் ரோமி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் சொந்தமாக தயாரித்துள்ளார். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசைக்குழு 4 மியூசிக்ஸ் இசைமைத்துள்ளது.

படத்தின் கதைக்களம் :

த்ரில்லர் கதையை கையில் எடுத்து ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ள நிலையில், அதை திரைக்கதையில் சரியாக செயல்படுத்தியிருக்கிறாரா என்பதை தற்போது பார்க்கலாம்.

வெறிச்சோடிய சாலையில் சைஜு குரூப் கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறது. இந்த சம்பவத்தை அவரது மனைவி நமீதா பிரமோத் மற்றும் சிலர் சம்பவத்தை பார்க்கின்றனர். கொலையை ஒரு பெண் செய்ததாகச் சிலரும், பேய் என்று சிலர் சொல்லவும், காவல்துறையினர் குழம்பிப் போகின்றனர். இதற்கிடையில் சைஜு குரூப் – நமிதா பிரமோத்தின் உறவினர் காளிதாஸ் ஜெயராமை ஒரு பெண் பின்தொடர்வது போல தெரிகிறது. அந்த பெண்ணிற்கும் சைஜு குருப் கொலைக்கும் தொடர்பு இருப்பதை அவர் கண்டறிகிறார். காவல் துறையினரின் உதவியுடன் அதைக் கண்டுபிடிக்க முயலும் போது பல எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்கின்றன. இறுதியாக கொலையாளி பெண்ணா? பேயா?  கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதையாகும்.

Aval Peyar Rajni Movie Review :

பரபரப்பான கதையை கையில் எடுத்துக்கொண்டு, படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் அனைவரும் முடிந்தவரை சிறப்பாக நடிக்க முயற்சி செய்துள்ளனர். படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க காளிதாஸ் ஜெயராம் மூலம் நகர்கிறது. இதில் பெரும் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் இரண்டாம் பாதி வில்லன் கதாபாத்திரம் மூலம் கடத்தியிருப்பதில் ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மற்ற பிரபலங்கள் கதையை நகர்த்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள், கதையில் பெரிய அளவில் மாற்றம் நிகழவில்லை.

Aval Peyar Rajni Movie Review : ‘அவள் பெயர் ரஜ்னி’ படத்தின் மூலம் முழுக்க ரசிகர்களுக்கு த்ரில்லான அனுபவத்தைக் கொடுக்க இயக்குநர் வினில் ஸ்கரியாவின் மெனக்கெடல் சரியாக வந்திருந்தாலும் திரைக்கதையின் சஸ்பென்ஸை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் காட்சிகள் ஸ்லோ மோஷன் உணர்வையும் தருகிறது. மேலும் இசைக்கு 4 மியூசிக்ஸின் பின்னணி இசை மிரட்டலாக இருப்பதால், காட்சிகளும் சில இடங்களில் பயத்தை ஏற்படுத்துகிறது. ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவும், தீபு ஜோசப்பின் படத்தொகுப்பும் திரில்லர் கதையை சிறப்பாக கையாள உதவியிருக்கிறது. முதல் பாதி அச்சுறுத்தலாக இருந்தாலும், இரண்டாம் பாதி கதையுடன் வேறு திசையில் பயணிக்கிறது. இதனால் ‘அவள் பெயர் ரஜ்னி’ திரைப்படம் பேய் படம், பழிவாங்கல் படம் என எல்லா வகைகளிலும் சேர்க்கப்படுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் இந்தப் படத்தை ஒருமுறை (Aval Peyar Rajni Movie Review) தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply