Avatar 2 OTT Release Date: விடுமுறை கொண்டாட்டம் அவதார் 2 ஓடிடி ரிலீஸ்

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியான படம் அவதார் 2- தி வே ஆஃப் வாட்டர். 3டி தொழில் நுட்பத்தில் வெளியான இந்த படம். 160 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு  சூப்பர் ஹிட் அடித்து 18,980 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்கிவர் ஜேம்ஸ் கேமரூன்.

சென்ற வருடத்தில் உலகம் முழுவதும் வெளியான படங்களின் வசூலில் அவதார்-2 படம் அதிகம் வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் இதுவரையில் வெளியாகி அதிகம் வசூலித்துள்ள படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அவதார் முதல் பாகம் வசூலித்த அளவிற்கு. அவதார்-2 அதன் வசூலை முறியடிக்க வில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவதார் படத்தின் முதல் பாகமும் சரி, இரண்டாம் பாகமும் சரி அம்சமான, புதுமையான கற்பனை  கொண்டவை.

குடும்பம் பிள்ளைகள், இயற்கை பாதுகாப்பு, உயிர்களின் பாதுகாப்பு இதுபோன்ற சாதாரண கதை களத்தை கொண்டு ஜேம்ஸ் கேமரூன் அவர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தார். 2009 ம் ஆண்டு வெளியான அவதார் படம் பெரும் அளவில் வெற்றிபெற்றது. பல விருதுளை பெற்றது குறிப்பாக புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளும் பெற்றது. அந்த அளவிற்கு சிறந்த படமாக இருந்தது. இதனை தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு பிறகு 2022 சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவதார் 2 ம் பாகம் வெளியானது. வெளியிடுவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில்  இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அவதார்  2 தி வே ஆஃப் வாட்டர் ரிலீஸ் ஆனதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். அதற்கு காரணம் 3டி எபெக்ட் தான். படம் ஆரம்பித்து முடியும் வரை அனைவரது கவனமும் அந்த படத்திலே தான் இருந்தது. ஏதோ வேறொரு உலகத்தில் பயணிப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு படத்தில் விஷுவல் எஃபக்ட் சிறப்பாக இருந்தது. தற்போது அந்த படத்திற்கும் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது சிறந்த விஷுவல் எஃபக்ட் க்காக வழங்கப்பட்டது.

அவதார் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பல நாட்கள் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில்  தற்போது ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் இன்று (28-03-2023) முதல் அவதார் 2  தி வே ஆஃப் வாட்டர் (Avatar 2 OTT Release) வெளியிடப்படுகிறது. இந்த கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த படியே இந்த படத்தை பார்பது ரசிகர்களுக்கு செம்ம என்ஜாய்மண்ட்டாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கப்போகிறது.

Leave a Reply

Latest Slideshows