Ayalaan 2 : பிரமாண்டமாக உருவாகும் 'அயலான் 2'

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தின் இரண்டாம் பாகம் (Ayalaan 2) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அயலான் இரண்டாம் பாகத்தின் VFX காட்சிகளுக்காக ரூ.50 கோடி செலவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் :

7 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் இதர வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழில் முதல் முதலாக ஏலியன் ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கும் அயலான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் VFX காட்சிகள் எல்லோரையும் பொருத்தவரை உலகத்தரம் வாய்ந்துள்ளது என்பது அனைவரின் கருத்து. குறைந்த செலவில் தரமான VFX காட்சிகளை உருவாக்கிய படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Ayalaan 2 :

அயலான் படம் நல்ல வெற்றியைப் பெற்றால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் முன்பே தெரிவித்திருந்தனர். தற்போது இப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை வேகமாகியுள்ளது. அயலான் படத்தின் VFX காட்சிகளை உருவாக்கிய Fondon FX நிறுவனம் தற்போது அயலான் இரண்டாம் பாகத்திற்கான (Ayalaan 2) ஒப்பந்த அறிக்கையை படக்குழுவினருடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அயலான் படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதையடுத்து இரண்டாம் பாகத்திற்கு தங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் அயலான் இரண்டாம் பாகத்தில் (Ayalaan 2) VFX காட்சிகளுக்காக மட்டும் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் தரத்தை உயர்த்த செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி இருந்தால் அது குறித்து மேலும் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் Fondon நிறுவனத்தின் உரிமையாளர் பிஜாய் அற்புதராஜின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply