Ayalaan Audio Launch : தரமான சம்பவம் செய்யப்போகும் அயலான்

இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது அயலான் இசை வெளியீட்டு விழா (Ayalaan Audio Launch) குறித்த தரமான தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கன்ஃபார்ம்.

அயலான் :

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், பானுப்ரியா, யோகி பாபு, பால சரவணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள படம் அயலான். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பல வேலைப்பாடுகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என பல விஷயங்கள் செய்திருக்கும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2018ல் தொடங்கப்பட்டது. படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்படவில்லை. மீதமுள்ள காட்சிகளை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார். இப்படி பல தடைகளை தாண்டி அயலான் திரைப்படம் வந்துள்ளது.

Ayalaan Audio Launch - படத்தின் அப்டேட் :

அயலான் படத்தின் மொத்த வேலைகளையும் முடித்து படத்தை தீபாவளிக்கு வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தனர். ஆனால் படத்தின் சிஜி வேலைகள் நடைபெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு காரணமாக அயலான் படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அந்த வகையில் அயலான் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த (Ayalaan Audio Launch) திட்டமிட்டுள்ளனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், கிறிஸ்துமஸுக்கு ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதாவது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Ayalaan Audio Launch) வரும் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.மேலும் இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இசைப் புயலின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சர்ச்சையானது. பல ரசிகர்கள் டிக்கெட் வாங்கினர் ஆனால் கச்சேரியில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த வகையில் அயலான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் (Ayalaan Audio Launch) போது ஏ.ஆர்.ரகுமானின் நேரடி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த கிறிஸ்துமஸ் பரிசாக அயலான் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர், ஏ.ஆர்.ரகுமானின் பாடல் ஆகியவை ரசிகர்களுக்கு இருக்கபோகிறது.

Latest Slideshows

Leave a Reply