Ayalaan Movie Release Date: சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Ayalaan Movie Release Date :

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் வரவேற்புக்குப் பிறகு இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அயலான் படத்தின் கதை ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையிலான நட்பைப் பற்றியது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பிரபல இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான இசைமைக்கிறார். இந்த படத்தில் இருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியானது. இந்த படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆன பிறகும் படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த அயலான் திரைப்படம் ‘அயலான்’ திரைப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2018 இல் தொடங்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது வேற்றுகிரக மனிதனுக்கும் மற்றும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான உறவை குறிக்கும் கதையாக இருக்கும் என்று யூகிக்கமுடிந்தது. 2018 ஜூன் மாதம் பிரமாண்ட பூஜையுடன் இப்படம் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு படத்தை தயாரித்து வந்த 24 ஏஎம் நிறுவனம் பல்வேறு நிதிப் பிரச்சனைகளில் சிக்கியதால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனாவின் தாக்கமும் படத்தை பாதித்தது. படம் முழுக்க விஎப்எக்ஸ் காட்சிகள் நிறைந்திருப்பதால் தரவேண்டும் என்பதற்காக படம் வெளியாவது தாமதமாகியது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்யா விரும்பாத நாங்கள் படத்தின் CGI காட்சிகளுக்காக கடுமையாக பணிபுரிந்துள்ளோம். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் பான் இந்தியா படமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

Latest Slideshows

Leave a Reply