Ayalaan Movie Review : அயலான் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை (Ayalaan Movie Review) பதிவிட்டு வருகின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள “அயலான்” படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் 8 வருடங்களுக்கு பிறகு தனது 2வது படமாக அயலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும், சரத் கேல்கர், ஈஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான்.

இப்படத்தின் இசை நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடந்தது, இது மிகவும் பெரிய மற்றும் உற்சாகமான கொண்டாட்டமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும் வகையில் வேற்றுகிரகவாசிகளின் பொம்மை காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஏலியன் பொம்மை வைக்கப்பட்டது. ஏலியன் பொம்மை பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ஏலியன் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக படம் பொங்கல் ரிலீசாக இன்று (ஜனவரி 12) வெளியாகியுள்ளது. ரஜினி முருகனுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் பொங்கலுக்கு வெளியாகும் படம் “அயலான்”. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செய்துள்ள அயலான் திரைப்படம் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங்கில் மிரட்டியுள்ளது.

Ayalaan Movie Review :

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று (ஜனவரி 12) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை (Ayalaan Movie Review) பெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பல திரையரங்குகளில் வெளியான அயலான் திரைப்படத்திற்க்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. முக்கியமாக படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

அயலான் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெறும் என கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. அதன்படி உலகம் முழுவதும் அயலான் முதல் நாளில் 20 முதல் 30 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறை முடிவதற்குள் 200 கோடி வரை வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் சிறந்த பாக்ஸ் ஆபிஸ் படமாக இது அமையும் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படம் குறித்து ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து (Ayalaan Movie Review) வருகின்றனர். படம் சூப்பர், குடும்பத்துடன் பார்க்கலாம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படமாகும். காமெடி, டான்ஸ், பாட்டு என எல்லாம் நல்லாம் இருக்கு, ஆக மொத்தத்தில் படம் வேற லெவலில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply