Ayalaan Trailer : அயலான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அயலான் படத்தின் ட்ரெய்லர் (Ayalaan Trailer) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இன்று நேற்று நாளை என்ற அறிவியல் புனைகதைத் திரைப்படத்தை மிகச்சிறப்பாக வழங்கிய இயக்குநர் ரவிக்குமாரின் கைவண்ணத்தில் அயலான் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஏலியன்களை மையமாக வைத்து அறிவியல் புனைகதை கதைக்களத்தில் ரவிக்குமார் திரைப்படம் எடுத்துள்ளார்.

இப்படம் வரும் 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும் வகையில் ஏலியன் பொம்மை காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஏலியன் பக்கத்தில் நின்று படம் எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ஏலியன் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் (Ayalaan Trailer) வெளியாகியுள்ளது. இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் ட்ரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Ayalaan Trailer :

நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் மிகவும் எளிமையான இளைஞராக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த ட்ரெய்லரில், இந்த பூமிக்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்படும் ஆபத்தை ஏலியனின் உதவியுடன் சமாளிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரும் (Ayalaan Trailer) படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 85 நாட்களில் முடிவடைந்த நிலையில், சிஜி பணிகள் மட்டுமே அதிக நாட்கள் எடுத்ததாக சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் படத்தின் VFX எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பாடல்களிலும் இவை எதிரொலிக்கின்றன. பாடல்களில் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் சிறப்பாக வந்துள்ளது. மொத்தத்தில் படம் எடுத்த உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்தது போலவே ரசிகர்களும் மகிழ்வார்கள் என எதிர்பார்க்கலாம். அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் சிறந்த படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply