Ayodhya Ram Mandir Statue : 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது

Ayodhya Ram Mandir Statue - 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறையில் செதுக்கப்பட்ட சிலை :

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறையை அலங்கரிக்கும் 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை ஆனது மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையான கருங்கல் பாறையில் (Ayodhya Ram Mandir Statue) இருந்து செதுக்கப்பட்ட சிலையாகும்.

C.Srikantappa, UGC-Emeritus Professor (Retired), Department Of Earth Sciences, University Of Mysore Report :

மைசூர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியரும் புவியியலாளருமான சி.ஸ்ரீகண்டப்பா அயோத்தியில் உள்ள கோவிலின் கருவறையை அலங்கரிக்கும் ராம் லல்லா சிலை ஆனது 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறையில் செதுக்கப்பட்டுள்ளது (Ayodhya Ram Mandir Statue) என்று தெரிவித்துள்ளார். இந்த பாறைகள் ஆனது ஆர்க்கியன் தார்வார் க்ரேட்டனின் (Archaean Dharwar Craton) ஒரு பகுதியாகும், குறிப்பாக தென்னிந்தியாவின் பழமையான பாறைகளில் ஒன்றாக அறியப்படும் தீபகற்ப க்னிஸ் (Peninsular Gneiss) ஆகும். இந்த பூமி ஆனது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த பூமி ஆனது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் அதன் முதல் உயிர் வடிவங்களைக் கண்டது. இந்த குழந்தை ராமர் சிலைக்கு பயன்படுத்தப்பட்ட பாறை, மைசூரிலிருந்து பெறப்பட்டது மற்றும் இது பண்டைய காலத்தைச் சேர்ந்தது ஆகும்.

இந்தப் பாறைகள் சர்கூர் குழு மற்றும் தார்வார் சூப்பர் குரூப்பை (Sargur Group And Dharwar Supergroup) உள்ளடக்கிய புவியியல் வரிசையைச் சேர்ந்தவை என்று பேராசிரியர் ஸ்ரீகண்டப்பா விளக்கினார். இந்தப் பாறைகள் முக்கியத்துவம் வாய்ந்த சர்கூர் ஷிஸ்ட் பெல்ட் (Sargur Schist Belt) மைசூருக்கு தென்மேற்கே அமைந்துள்ளது. “Gneissic பாறைகளில் உள்ள Zircon தானியங்களின் U-Pb ஐசோடோபிக் ஆய்வுகள் (U-Pb Isotopic Studies Of Zircon Grains In Gneissic Rocks) மூன்று பில்லியன் வருடங்கள் ஆகின்றன” என்று அவர் வியாழனன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து ராமர் சிலை (Ayodhya Ram Mandir Statue) செய்யப்பட்டுள்ளது. மைசூர் பல்கலைக்கழகத்தின் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், மைசூர் மாவட்டம் குகேகவுடனாபுராவில் (Guggegowdanapura, Mysuru District) செயல்படும் குவாரியில் (Active Quarry In Guggegowdanapura) இருந்து பெறப்பட்ட குழந்தை ராமர் சிலையை செதுக்கப் பயன்படுத்தப்பட்ட பாறை 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும், தென்னிந்தியாவின் பழமையான பாறை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மோடியை கவர்ந்த கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் :

மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் குழந்தை ராமர் சிலையை செதுக்கியுள்ளார். அருண் யோகிராஜ் சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர். MBA படித்த அருண் யோகிராஜ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிற்ப கலை மீதான ஆர்வத்தின் காரணமாக அவர் பணியில் இருந்து விலகி சிற்பங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். பிரதமர் மோடியை இவர் வடித்த சுபாஷ் சந்திரபோஸின் 30 அடி சிலை வெகுவாக கவர்ந்தது. அந்த சிலையை பிரதமர் மோடி பாராட்டியதால் அதே சிலையை சிறிய அளவிலே செதுக்கி மோடிக்கு அவர் பரிசளித்துள்ளார். ஆகம விதிமுறைப்படி கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள 51 அங்குல உயர குழந்தை ராமர் சிலை, ராமர் கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டு, கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலைக்கு (Ayodhya Ram Mandir Statue) கணேச – அம்பிகா பூஜை, வருண பூஜை போன்ற பூஜைகள் 4 மணி நேரம் நடைபெற்றன.

Latest Slideshows

Leave a Reply