Ayothi Ramar Temple : கும்பாபிஷேகம் நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் குறித்த முக்கிய விஷயங்கள்
அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஆனது நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராமர் கோவிலின் சிறப்புகள் குறித்த முக்கிய விஷயங்களை ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளை விரிவாக பட்டியலிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் (Ayothi Ramar Temple) கட்ட அனுமதிக்க உச்சநீதிமன்றம் ஆனது நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளை ஆனது இந்த ராமர் கோவில் கட்டுமானத்துக்காக தனியாக அமைக்கப்பட்டது. 2019ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் என்பது விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
70 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த கோவிலின் முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் ஆனது 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. Ayothi Ramar Temple கருவறையில் ராமர் சிலை ஆனது 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் என 10 ஆயிரத்துக்கும் அதிகமான பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். Ayothi Ramar Temple கருவறையில் நிறுவப்படும் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து வர உள்ளார்.
Ayothi Ramar Temple கட்டுமானத்தில் உள்ள சிறப்புகள் குறித்து ஸ்ரீராம ஜென்ம தீர்த்தா அறக்கட்டளை சார்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது :
பாரம்பரிய நாகரா கட்டடக்கலையில் Ayothi Ramar Temple கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டக்கலையில் தான் வடமாநிலத்தில் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 3 அடுக்குகளாக இந்த ராமர் கோவில் அமைய உள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டிருக்கும். ராமர் கோவில் ஆனது கிழக்கு மேற்காக 380 அடி நீளமும் மற்றும் 250 அடி அகலமும் கொண்டது. இந்த ராமர் கோவிலின் மொத்த உயரம் என்பது 161 அடியாகும். கோவிலில் பிரமிடு டவர் (சிகரம்) அமைய உள்ளது. அதன் பிரமிடின் மேற்பகுதியில் கலசம் வைக்கப்பட உள்ளது. இந்த ராமர் கோவிலில் மொத்தம் 392 தூண்கள், மற்றும் 44 கதவுகள் இருக்கும். இந்த ராமர் கோவில் தூண்கள் மற்றும் சுவர்கள் எல்லாம் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களின் உருவங்கள் ஆனது சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ராமரின் குழந்தை வடிவ சிலை ஆனது இந்த ராமர் கோவிலின் கர்ப்பகிரஹத்தில் நிறுவப்படுகிறது. முதல் தளத்தில் ஸ்ரீராம் தர்பார் ஆனது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராமர் கோவிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபங்கள் என மொத்தம் 5 மண்டங்கள் ஆனது இருக்கும். கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் வந்து செல்ல இந்த ராமர் கோவிலில் வசதியாக சாய்தளங்கள், லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவிலை சுற்றி 732 மீட்டர் நீளம், 14 அடி அகலத்தில் பார்கோட்டா காம்பவுண்ட் சுவர் ஆனது கட்டப்பட்டுள்ளது. கோவிலின் 4 மூலைகளிலும் சூர்யா தேவ், தேவி பகவதி, கணேஷ் மற்றும் சிவன் கோவில்கள் என நான்கு கோவில்கள் கட்டப்பட்டுள்னள. வடக்கு திசையில் அன்னபூரணிகோவிலும் மற்றும் தெற்கு திசையில் அனுமன் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சீதா கூப் எனும் கிணறு கோவிலில் உள்ளது. மேலும் இந்த ராமர் கோவில் வளாகத்தில் மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யா ஆகியோருக்கான மந்திர்கள் ஆனது அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ராமர் கோவிலின் தென்மேற்கு பகுதியான குபேர் திலாவில் ஜடாயு நிறுவப்பட்டுள்ளது மற்றும் சிவன் மந்திர் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. இந்த குபேர் திலாவில் எங்கும் இரும்பு பொருள் பயன்படுத்தப்படவில்லை. 14 மீட்டர் தடிமனில் ரோலர்-காம்பாக்டட் கான்கிரீட் மூலம் இதன் அடிப்பகுதி ஆனது அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை பாறையின் தோற்றத்தை இது காட்டுகிறது. இந்த ராமர் கோவிலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீவிபத்து ஏற்பட்டால் தண்ணீர் சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகள் ஆனது செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் வகையில் ஒரு மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 25,000 பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரீகர்கள் வசதி மையம் ஆனது கட்டப்பட்டு வருகிறது. இது பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, மற்றும் லாக்கர் வசதியுடன் கட்டப்படுகிறது. மேலும் இந்த ராமர் கோவிலில் யாத்ரீகர்கள் வசதி மையம் ஆனது குளிக்கும் வசதி, கழிவறை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்