Ayushman Bharat Health Insurance Scheme : பிரதமரின் ‘ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு திட்டம்’

பிரதமரின் ‘Ayushman Bharat Health Insurance Scheme’ - 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் :

மத்திய அமைச்சரவை ஆனது இந்தியாவில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் வருவாய் நிபந்தனைகள் ஏதுமின்றி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை (AB PM–JAY) வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் செப்டம்பர் 11, 2024 அன்று மத்திய அமைச்சரவை கூட்டம் ஆனது நடைபெற்றது.  

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வருமான நிபந்தனையின்றி விரிவாக்க ஒப்புதல் ஆனது தரப்பட்டுள்ளது. இந்த Ayushman Bharat Health Insurance Scheme ஆனது ரூபாய் 5 லட்சம் வரையில் இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழிவகுக்கும் (குடும்ப அடிப்படையில் ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறுவார்கள்). இந்த ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் நான்கரை கோடி குடும்பங்களைச் சேர்ந்த ஆறு கோடி மூத்த குடிமக்கள் பலன் பெறுவார்கள்.

இந்த ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா ஆனது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி சுகாதார உத்தரவாதத் திட்டம் ஆகும். சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் AB PM-JAY இன் பலன்களைப் பெற இந்தியாவின் அனைத்து மூத்த குடிமக்களும் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த AB PM-JAY இன் கீழ் தகுதியுள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் புதிய தனித்துவமான அட்டை ஆனது வழங்கப்படும். 

இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட பிற திட்டங்கள் :

  • மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ரூபாய் 10,900 கோடி மதிப்பில் பிஎம் இ டிரைவ் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கான இந்த பிஎம் இ டிரைவ் திட்டத்தின் மூலம் மின் வாகனங்கள் வாங்க மானிய சலுகைகள் மற்றும் மின்சார சார்ஜிங் மையங்கள் ஆனது அமைக்கப்படும்.
  • சாலை வசதி இல்லாத 25 ஆயிரம் கிராமங்களுக்கு 62,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்க பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • ரூபாய் 12,461 கோடி ஆனது 31,350 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் நிலையங்கள் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply