Azad Engineering Limited IPO - டெண்டுல்கரின் ரூ.5 கோடி முதலீடு 360% லாபம் பெற்றுள்ளது

Azad Engineering Limited என்பது Hyderabad Based ஒரு Clean Energy, விண்வெளி பாகங்கள் மற்றும் Turbines உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

IPO என்றால் என்ன?

பொதுமக்களுக்கு ஒரு நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக வழங்குவது IPO எனப்படும். அதாவது  IPO என்பது Initial Public Offering ஆகும். தங்கள் வணிகத்திற்கு நிதி தேவைப்படும்போது நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்று பங்குச் சந்தையில் தங்களைப் பட்டியலிடுகிறார்கள். சச்சின் டெண்டுல்கர் 2023 மார்ச் 6 அன்று ஒரு பங்குக்கு ரூ.114.1 என்ற விகிதத்தில் Azad Engineering Limited நிறுவனத்தின் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை (Azad Engineering Limited IPO) வாங்கினார். தற்போது சச்சின் டெண்டுல்கர் நிறுவனத்தின் 438,210 பங்குகளை வைத்துள்ளார். இது சச்சின் டெண்டுல்கரின் முதலீட்டில் 360 சதவீதம் லாபம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (டெண்டுல்கர் ஒரு பங்குக்கு ரூ.114 என்ற விகிதத்தில் வாங்கிய பங்குகள்). சச்சின் டெண்டுல்கரைத் தவிர, பிரபல விளையாட்டு வீரர்களான பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஆகியோர் தங்கள் பணத்தை ஆசாத் இன்ஜினியரிங் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சேர்த்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் முதலீடு செய்த ஐந்து நாட்களுக்குப் பிறகு PV Sindhu, Saina Nehwal, VVS Laxman ஆகிய மூன்று விளையாட்டு வீரர்களும் Azad Engineering Limited நிறுவனத்தில் தலா ரூ.1 கோடி முதலீடு செய்தனர். இருப்பினும், இந்த மூன்று விளையாட்டு வீரர்களும் சச்சின் டெண்டுல்கரை விட அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்கினர். PV Sindhu, Saina Nehwal, VVS Laxman ஆகிய மூன்று விளையாட்டு வீரர்களும் தலா ரூ.228.17க்கு பங்குகளை வாங்கினர். இப்போது PV Sindhu, Saina Nehwal, VVS Laxman ஆகிய மூன்று விளையாட்டு வீரர்களின் ரூ.1 கோடி முதலீடு ஆனது 130% அதிகரித்து ரூ.2.3 கோடியாக இருக்கலாம்.

Azad Engineering Limited IPO - ரூ.740 கோடி IPO

Azad Engineering Limited-ன் IPO ஆனது டிசம்பர் 20 தேதி முதல் டிசம்பர் 22 தேதி வரை திறந்திருந்தது. டிசம்பர் 26ஆம்  தேதி Azad Engineering Limited நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு டிசம்பர் 28ஆம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். டிசம்பர் 23 அன்று சாம்பல் சந்தையில் Azad Engineering Limited IPO ஆனது 65.84% அதாவது ஒரு பங்குக்கு ரூ.345 என்ற பிரீமியத்தை எட்டியுள்ளது. Azad Engineering Limited நிறுவனம் இந்த IPO-வை ரூ.740 கோடி திரட்டுவதற்காக கொண்டு வந்தது. இது ஒட்டுமொத்தமாக இப்போது 83.04 மடங்கு சந்தா பெற்றுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் பட்டியலிடப்பட்டால், முதலீட்டாளர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். பட்டியல் விலையைப் பொறுத்து லாபம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply