Babar Appointed As Captain : மீண்டும் பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் அசாம் நியமனம்

லாகூர் :

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் (Babar Appointed As Captain) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தவர் பாபர் அசாம். இந்நிலையில் பாபர் அசாம் கேப்டனாக செயல்பட்டதால் முக்கிய தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால், 2023ல் நடந்த உலக கோப்பை தொடருடன் பாபர் அசாம் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, டி20 தொடருக்கு புதிய கேப்டனாக ஷகின் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டார். டெஸ்ட் கேப்டனாக சான் மசூத் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் ஷான் மசூத் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

Babar Appointed As Captain :

அடுத்த உலக கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியை சிறப்பாக தயார்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் மீண்டும் பழைய கேப்டன் பாபர் அசாமை நியமிக்க பாகிஸ்தான் தேர்வு குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் (Babar Appointed As Captain) நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு, பாபர் அசாம் மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேர்வுக் குழுவின் முடிவின்படி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக பாபர் ஆசாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி (Babar Appointed As Captain) நியமித்துள்ளார்.

இந்த நிலையில் பாபர் ஆசாமின் முதல் தொடர் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறுவதில்லை. இந்த நேரத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு ராணுவ வீரர்களிடம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதி மிகவும் மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply