Babar Azam Reaches Fastest 10000 Runs : பத்தாயிரம் ரன்கள் குவித்த வீரர்களில் பாபர் அசாம் முதலிடம்

மும்பை :

டி20 கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் (Babar Azam Reaches Fastest 10000 Runs) படைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் பேட்டிங் பார்முக்கு திரும்பியுள்ளார். விராட் கோலியை போன்று அனைத்து வித கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படும் வீரர் பாபர் அசாம். விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு இணையான வீரராக பாகிஸ்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மட்டுமின்றி லீக் போட்டிகளிலும் பாபர் அசாமின் ஆட்டம் அச்சுறுத்தலாக உள்ளது. பிஎஸ்எல், எல்பிஎல், சிபிஎல், பிபிஎல் என 4 வகையான லீக்களிலும் பாபர் அசாம் விளையாடி வருகிறது.

Babar Azam Reaches Fastest 10000 Runs :

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் (Babar Azam Reaches Fastest 10000 Runs) படைத்துள்ளார். இதுவரை 271 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் அசாம், 84 அரைசதங்கள், 10 சதங்கள் உட்பட 10,066 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு முன், மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 285 இன்னிங்ஸ்களில் 10000 ரன்களை கடந்திருந்தார். இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் லீக் போட்டிகள் இரண்டையும் இணைத்து இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் பின்ச் 327 இன்னிங்ஸிலும், ஜோஸ் பட்லர் 350 இன்னிங்ஸிலும் 10,000 ரன்களை கடந்துள்ளனர். அதிவேகமாக 10000 ரன்களைக் குவித்து பழம்பெரும் வீரர்களை முறியடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் (Babar Azam Reaches Fastest 10000 Runs) பாபர் அசாம். இதனால், சைலண்ட் மோடில் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக பாபர் அசாம் மாறிவிட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பாபர் அசாமுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply