Badam Pisin Benefits in Tamil: பாதாம் பிசினை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்

Badam Pisin Benefits: உடல் சூட்டைக் குறைக்க பொதுவாக தண்ணீர் மோர், எலுமிச்சைச் சாறு, இளநீர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். அதே போல இந்த பாதாம் பிசினும் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக்கவும் உதவுகிறது. சிலருக்கு உஷ்ண பிரச்சனை ஏற்படும் போது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பாதாம் பிசின் சேர்க்கலாம். இந்த பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிசின் ஆகும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பாதாம் பிசின் மருத்துவ குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் இரும்பு, கொழுப்பு, புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. பாதாம் பிசின் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூட ஜிகிர்தண்டா மூலம் அதை அபாரமாக ரசித்திருப்பார்கள்.

தசைகளை வலுப்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த ஒன்றாகும். இதேபோல், இந்த பாதாம் பிசின் பல குளிர்பானங்களின் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதாம் பிசின் உள்ளூர் கடைகளில் ஜெல்லி, மில்க் ஷேக், ஆரோக்கியமான பானங்கள், லட்டுகள், சர்பத், ஜிகர்தண்டா போன்றவற்றை தயாரிக்க சேர்க்கப்படுகிறது. அதேபோல பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை மேம்படுத்த உதவுகிறது. பிசின் என்பது கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் கருவேல மரத்தின் பட்டையிலிருந்து பிசின் பெறப்படுவதாகக் கருதப்படுகிறது. இந்த பிசின் பற்றி நிறைய வரலாறுகள் இருந்தாலும், பாதாம் பிசின் நன்மைகள் ஏராளம். அப்படியென்றால் பாதாம் பிசின் நமக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

பாதாம் பிசினின் ஆரோக்கிய நன்மைகள் :

Badam Pisin Benefits - பிரசவத்திற்கு பிறகு பழைய நிலைக்கு வர :

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு பாதாம் பிசினுடன் லட்டு கொடுக்கும் சடங்கு உள்ளது. இந்த முறை ஆயுர்வேத முறைப்படி செய்யப்படுகிறது. இந்த பாதாம் பிசின் பெண்களின் உடல் பிரசவத்திற்குப் பிறகு ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது. அதேபோல், மாதவிடாய் சுழற்சியும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது. எனவே இந்த பாதாம் பிசினை லட்டு போன்ற இனிப்புகளில் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்லது.

Badam Pisin Benefits - உடலுக்கு குளிர்ச்சியை தர :

பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளுரூட்டியாக செயல்படுகிறது. இது உடல் சூட்டை குறைக்க பயன்படுகிறது. சிலர் எல்லா நேரங்களிலும் உடம்பு சூடாக இருக்கிறது. உடம்பு சூட்டின் காரணமாக, அவர்கள் வயிற்று வலி, நீர்ச்சத்து குறைபாடு போன்றவற்றை அனுபவிக்க நேரிடலாம். எனவே பாதாம் பிசின் அதிகப்படியான உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது பாதாம் பிசின் அனைத்து உடல் நிலைகளுக்கும் ஏற்றது.

Badam Pisin Benefits - க்ரீம் தயாரிக்க :

மருந்து நிறுவனங்களும், உணவு நிறுவனங்களும் இந்த பாதாம் பிசினை க்ரீமாக பயன்படுத்துகின்றனர். இந்த பிசின் அரை-திட மற்றும் திரவ வடிவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் இது லட்டு, ஐஸ்கிரீம்கள் மற்றும் குளிர் பானங்கள் போன்ற இனிப்பு வகைகளின் சுவைக்காக பயன்படுகிறது.

பசை போன்ற பாகுத்தன்மை காரணமாக இது ஐஸ்கிரீம் மற்றும் ஜெல்லிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

Badam Pisin Benefits - ஆண்களுக்கு நல்லது :

இன்று ஆண்கள் மலட்டுத்தன்மை சந்திக்க காரணம் விந்தணுக்களின் பற்றாக்குறை, ஆண்மைக்குறைவு, வீரியமின்மை போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்த விந்தணுக்கள் ஆண்களின் உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்பட வாய்ப்புள்ளது. இறுக்கமான ஆடைகள், உட்கார்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்றவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கும். அவை விந்தணுவை நீர்த்துப்போகவும் செய்கின்றன. இவ்வாறான பிரச்சனைகள் நீங்க ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு டீஸ்பூன் பாதாம் பிசின், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து இரவில் குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து விந்தணுக்கள் வலுவடையும். நரம்புகள் வலுவடையும். மலட்டுத்தன்மை தவிர்க்கப்படுகிறது.

Badam Pisin Benefits - வெள்ளைப்படுதல் குணமாக :

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இயல்பான ஒன்றாகும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது வெள்ளைப்படுதலும் அதிகரிக்க கூடும். துர்நாற்றம் இல்லாத, வெள்ளைப்படுத்தல் ஏற்படும்போது, பாதாம் பிசின் எடுத்துக்கொண்டால் வெள்ளைப்படுதல் குணமாகும். இது கருப்பை உஷ்ணத்தையும் தவிர்க்க உதவுகிறது. கருப்பையில் அல்சர் இருந்தாலும் படிப்படியாக குணமாக்கும் திறன் பாதாம் பிசினுகு உண்டு. பாதாம் பிசினை ஊறவைத்து ஒரு டீஸ்பூன் எடுத்து அப்படியே சாப்பிடுங்கள். காலை, மாலை, இரவு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

Badam Pisin Benefits - நெஞ்செரிச்சல் நீங்க :

அதிக காரமான மற்றும் மசாலா உணவுகளை உட்கொள்வதால் வயிற்றில் புண் ஏற்படலாம். சாப்பிட்டவுடன் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிற்றில் அமிலச் சுரப்பு சமநிலையின்மை ஏற்பட்டாலும் உணவு செரிக்கப்படாமல் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. பாதாம் பிசின் அமிலத்தை நடுநிலையாக்குகிறது மற்றும் நெஞ்செரிச்சலை குணப்படுத்துகிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை போக்கி குளிர்ச்சியையும் தருகிறது. ஊறவைத்த பாதாம் பிசினை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, குடித்து வந்தால் அது உடனடி பலத்தைத் தரும். காய்ச்சலுக்குப் பிறகு உடல் இழந்த வலிமையை மீட்டெடுக்க பாதாம் பிசின் உதவுகிறது. பித்தம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துகிறது.

Badam Pisin Benefits - சிறுநீர் கடுப்பு நீங்க :

நோய்கள் தீவிரமடைவதற்கு முன்பே அறிகுறிகள் பொதுவாகத் தெரியும். ஆனால் சிறுநீர்க்கடுப்பு பொறுத்தவரை அறிகுறியே தீவிரமாக இருக்கும். அதிக உபாதை தரக்கூடிய நோய் என்றும் இதை கூறலாம். ஆண்களை விட பெண்களுக்கு தான் அடிக்கடி இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீர்க்கடுப்பு, நீர் சுளுக்கு போன்று சொட்டு சொட்டாக சிறுநீர் கழிவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாவது என பாதிப்பு ஏற்படும் போது பாதாம் பிசின் எடுத்துக் கொண்டால் ஆரம்பத்திலேயே சிறுநீர்க்கடுப்பு குணமாகும். இது சித்த மருத்துவத்தில் கல்லடைப்பு போக்கும் மருந்து என்று அழைக்கப்படுகிறது.

Badam Pisin Benefits - தசை வலிமை அதிகரிக்க :

பாதாம் பிசினை உட்கொண்டு வந்தால் இதில் உள்ள அதிகப்படியான புரத உள்ளடக்கம் காரணமாக உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது தசைகள், எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசை நார்களை வலுப்படுத்த உதவுகிறது. அதேபோல், பாதாம் பிசின் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

Badam Pisin Benefits - செரிமானத்தை மேம்படுத்த :

பாதாம் பிசின் செரிமானத்தை மேம்படுத்துகிறது, ஏனெனில் அவை ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகின்றன. அதாவது அவை குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கின்றன. ப்ரீபயாட்டிக்குகள் குடலில் புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. புரோபயாடிக்குகள் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன. இவ்வாறு பல நன்மைகளை கொண்ட பாதாம் பிசினை தினமும் உணவுடன் சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

Latest Slideshows

Leave a Reply