Bakrid 2023: பக்ரீத் பண்டிகை (Eid al Adha) கொண்டாடுவதற்கான வரலாறு!!
பக்ரீத் என்றால் என்ன?
பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10வது நாளில் இந்த பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் என்பது பக்ரா மற்றும் ஈத் ஆகிய இரண்டு உருது வார்த்தைகளின் கலவையாகும். இது உலக முஸ்லிம் மக்களால் பக்ரீத், ஈத் அல் உதா, ஈத் அல் அதா, ஈத் அல் ஜூஹா என வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இது ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. தியாகத் திருநாள் என்றும் ஈகைத் திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நபி இப்ராகீமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஹெஜ் செய்வது அடிப்படை கடமை
தமிழ்நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது உருது மொழியில் பக்ரீத் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்று அழைக்கப்படுகிறது. பொருளாதார வசதியுள்ள இஸ்லாமியர்களுக்கு, ‘ஹஜ்’ செய்வது அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது மெக்காவிற்கு ஒரு புனிதப் பயணமாக செல்வது ஆகும். புனிதப் பயண கடமைகளில் கடைசியாக இறைவனுக்கு பலி செலுத்துவது. பக்ரித் தியாகத் திருநாளின் முக்கிய அம்சமாக இறைவனுக்கு சிறப்பு தொழுகை செய்வது ஆகும். பிரார்த்தனைகள். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புதிய ஆடைகளை அணிந்து தொழுகையில் கலந்து கொள்கின்றனர். பலியிடல் தியாகத் திருநாளின் சிறப்பம்சமாகும்.
மனம் திறந்த குர்பானி கொடுங்கள்
பக்ரீத் திருநாளில்தான், ‘உன்னால் முடிந்த உதவியை ஏழைகளுக்குக் கொடுங்கள்’ என்ற கொள்கை உறுதியாக கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லீம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு பலியிட்டு (குர்பானி) அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஒரு உன்னதமான வணக்க வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. ‘குர்பானிக்காக பிராணியை பலி கொடுக்க அறுக்கும்போது அந்த இரத்த சொட்டு போமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப் பட்டதாகிறது. எனவே அனைவரும் இறைவனுக்கு குர்பானி கொடுங்கள் என நபிகள் நாயகம் கூறியுள்ளார்.
பக்ரீத்தின் வரலாறு
இப்ராஹிம் நபி அவர்கள் தனது காலத்தின் கொடூரமான ஆட்சியின் போது அச்சமின்றி சட்டத்தை போதிப்பவராக இருந்தார். உலகளாவிய பல நாடுகளுக்குச் சென்று அன்பின் பாதையைப் போதித்தார். ‘இறைவனே எல்லாம் … அவருக்கு நிகரானது எதுவுமில்லை’ என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்த அவருக்கு இரண்டு மனைவிகள்… குழந்தைகள் இல்லை. இதனால் மனம் வருந்திய இப்ராஹீம் நபி தன் மகனின் பாசத்திற்காக ஏங்கினார். அந்த நேரத்தில் இப்ராஹிமின் இரண்டாவது மனைவி ஹாஜாரா அவர்களுக்கு நபி இஸ்மாயில் பிறந்தார். இதன்பின் இப்ராஹிம் நபியின் வாழ்க்கைப் பயணமானது மகிழ்ச்சியாகத் தொடர்ந்தது.
ஒரு நாள் நள்ளிரவு. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹிமுக்கு ஒரு கனவு வந்தது. தன் மகனையே கடவுளுக்குப் பலியிட வேண்டும் என்று நபிகள் நாயகம் கனவு கண்டார். அதன் பிறகு அவர் கவலை அடைந்தார். இப்ராஹிம் நபி தாம் கண்ட கனவை தனது அன்பு மகனுக்குக் கூறினார். இறை நம்பிக்கை கொண்ட இப்ராஹீம் நபிக்கு பிறந்த குழந்தை, தந்தையின் கருத்துக்கு எதிராக செயல்பட வாய்ப்பில்லை. கனவில் வந்த இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றுக… என் தந்தையே! என்று தன்னுடைய தந்தையிடம் நபி இஸ்மாயில் பணிந்தார்.
'சிஃப்ரயீல்' எனப்படும் வானவர்
‘அப்பாவின் பாசத்தால் மனதை மாற்ற முடியவில்லையா?’ இந்த எண்ணம் அவரது மகன் நபி இஸ்மாயிலின் இதயத்தில் ஒரு வேதனையை ஏற்படுத்தியது. அதற்கு அவர் ஒரு வழியைப் பயன்படுத்தினார். தந்தையின் கண்களை துணியால் கட்டி, கோடரியை கையில் கொண்டு வந்தான்… நபி இஸ்மாயிலின் கழுத்து கோடரியின் கூர்முனையில் இருந்தது… அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் அல்லது அல்லாஹ்வின் சிந்தனையாக ஒரு அழுத்தம் எழுந்து நின்றது. இறைவன் அல்லாஹ் ‘சிஃப்ரயீல்’ என்ற வானவரை அனுப்பி அந்த ‘பலியை’ தடுத்தான். கடவுள் அங்கே ஒரு ஆட்டைக் கீழே இறக்கி, இஸ்மாயீலுக்குப் பதிலாக ஆட்டை அறுக்கும்படி இப்ராஹிமுக்குக் கட்டளையிட்டார். மைந்தன் நபி இஸ்மாயில் உயிரையே பலி கொடுக்க துணிந்த அந்த தந்தையின் தியாகத்தைப் போற்றிய, அந்த நரபலியைத் தடுத்து நிறுத்தியது இறைவனின் அன்புதான்.
அன்றைய தினம் அந்தச் சம்பவத்தின் நினைவாக ஒரு ஆட்டைப் பலியிட்டு அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்து சாப்பிடுமாறு ‘இறை’ குரல் கூறியது. காலங்காலமாக காத்துக் கிடந்து பெற்றதோ ஒரு பிள்ளை அந்த பிள்ளையையும் இறைவனுக்கு பலியிடத் துணிந்த தியாகத்தின் திருவுருவமாக, இப்ராஹிமின் தியாகம் போற்றப்படுகிறது. தந்தையின் தியாகத்தை உணர்ந்து, தந்தையே பாசத்தால் மறுத்தலித்து விடுவாரோ என்ற எண்ணத்தில், அதற்கான மாற்று வழியையும் கண்டெடுத்த அருமை மகனார் நபி இஸ்மாயில் தியாகமும் போற்றப்படுகிற நாளாக ஹஜ் பெருநாளான ‘பக்ரீத்’ போற்றப்படுகிறது.
பலியிடல் தியாகத் திருநாளின் சிறப்பம்சமாகும். இந்த பக்ரீத் பண்டிகையில் முஸ்லிம்கள் தங்களது வீட்டில் இறைவனின் பெயரால் ஆடு, ஒட்டகம், மாடு ஆகியவற்றை இறைவனுக்கு பலியெடுக்கின்றனர். பலியிடப்பட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து… ஒரு பங்கு அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு … மூன்றாவது பங்கை அவர்கள் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக பலியிடப்படும் விலங்கு ஊனமற்றதாகவும், குறைந்தது ஒரு வருடமாவது இருக்கும்படியும் உறுதி செய்யப்படுகிறது.
இறை தூதர் என போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த வாழ்வை எண்ணி, அவரது தியாகத்தின் மகத்துவத்தைப் போற்றும் வகையிலும் இந்த ‘பக்ரீத்’ நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பகிரீத்(Bakrid 2023) கொண்டாட்டம்
பக்ரித் கொண்டாடப்படும் தேதி உலகம் முழுவதும் வேறுபடுகிறது. இது பிறையின் பார்வையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன் விளைவாக, இஸ்லாமிய மாதத்தின் தொடக்க தேதி மற்றும் பிறை நிலவின் பார்வை பல பகுதிகளில் வேறுபடுகின்றன. இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையானது ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கர்த்தார், ஓமன், ஈராக், அமெரிக்கா, ஐரோப்பியா, கனடா, சிரியா, ஜோடான் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு ஜூன் 28 புதன்கிழமை ( இன்று ) கொண்டாடப்படுகிறது.
அதே நேரத்தில், இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், புர்னே, இந்தோனேசிய, ஹாங்காங் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பக்ரீத் பண்டிகையானது ஜூன் 29 (நாளை) வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இனிப்புகள் மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த புனிதமான நேரத்தில், மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வதோடு அவர்களின் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இதனால் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்வோம் அனைவருக்கும் ‘பகிரீத்’ திருநாள் வாழ்த்துக்கள்.