Bakrid 2025 : பக்ரீத் பண்டிகையின் வரலாறும் கொண்டாட்டமும்

பக்ரீத் எனப்படும் ஈத் அல் அதா இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் (Bakrid 2025) ஒன்றாகும். பக்ரீத் பண்டிகை முஹம்மது நபியின் தியாக திருநாளாகவும், இறை நம்பிக்கை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையின் வரலாறு (Bakrid 2025)

அல்லாஹ்வின் (இறைவன்) இறைபரிசோதனையில் தனது மகனையே பலியிட துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை இந்த நாள் நினைவு கூறுகின்றது. இந்த நாளில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் பலியிடப்படுகின்றன. இதற்கு குர்பானி (கொடுப்பது) என்று பெயர். பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியை 3 பங்குகளாக பிரித்து ஒரு பங்கு குடும்பத்திற்கும், ஒரு பங்கு உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், ஒரு பங்கு ஏழைகளுக்கும் வழங்கப்படுகிறது. 

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு துல் ஹஜ் மாதத்தில் மூன்று நாட்கள் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த ஹஜ் பயணம் நிறைவடையும் 10வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பக்ரீத் பண்டிகையின் போது ஏழைமக்களுக்கு தானம் மற்றும் தர்மம் செய்வது வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால்தான் பக்ரீத் பண்டிகை “தியாகத் திருநாள்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை செய்கிறார்கள். இந்த தொழுகைக்குப் பின்னர் ‘குத்பா’ சொற்பொழிவு நடைபெறுகிறது. இந்த சொற்பொழிவில் சமத்துவம், சமூக சேவையின் அவசியம், தியாகத்தின் முக்கியத்துவம் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. மேலும் இதன் நோக்கம் நமது உணர்வுகள் மற்றும் வாழ்க்கையில் அல்லாஹ்வுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

Bakrid 2025 - Platform Tamil

பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவம்

இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்துமே பிறை (நிலவு) தெரிவதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் மே 27-ம் தேதியன்று பிறை தெரிந்ததன் அடிப்படையில் ‘துல் ஹஜ்’ மாதம் துவங்கியதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதன்படி 10வது நாளான ஜூன் 6-ம் தேதி  சவுதி அரேபியாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தியாவில் மே 28-ம் தேதி தான் பிறை தெரிந்து துல் ஹஜ் மாதம் துவங்கியதால் தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply