Balloon Modern Cinema Theatre - வியக்க வைக்கும் நவீன வடிவம்
தமிழ்நாட்டில் முதல்முறையாக, தருமபுரியில் வியக்க வைக்கும் நவீன வடிவமான Balloon Modern Cinema Theatre நிறுவப்பட்டுள்ளது. இந்த Balloon Modern Cinema Theatre ஆனது மிகப்பெரிய பலூனுக்கு உள்ளே இருந்து திரைப்படம் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் செயல் வடிவம் ஆகும். உலக மக்களுக்கு பழங்காலம் முதல் இன்று வரை ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருப்பது சினிமா திரையரங்கம் ஆகும். உலகில் திரைப்பட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் திரையரங்குகளின் வடிவமும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது.
திரைப்படத் துறையைப் போலவே திரைப்படங்களை திரையிட்டு, ரசிகர்களை மகிழ்விக்கும் திரையரங்குகளின் வடிவமும், ஒவ்வொரு நாளும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. ஆரம்பக் காலத்தில் மணலைக் கூட்டி தரையில் அமர்ந்து சினிமா திரைப்படங்களை பார்த்து ரசித்த டூரிங் டாக்கீஸில் தொடங்கி இன்றைய மல்டிப்ளக்ஸ் வரையிலும், தொழில்நுட்பங்களில் DTS, 3D, I Max, Laser Dolby உள்பட மிகவும் அதிநவீனமாக உருவெடுத்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
அக்குபஞ்சர் மருத்துவர் ரமேஷ் பொம்மிடி கிராமத்தில் Balloon Modern Cinema Theatre-ஐ நிறுவியுள்ளார் :
தருமபுரி மாவட்டம் பொம்மிடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ஒரு அக்குபஞ்சர் மருத்துவர் ஆவார். இவர், தனது சொந்த ஊரில் Balloon Modern Cinema Theatre-ஐ நிறுவியுள்ளார். மருத்துவர் ரமேஷ் டெல்லியைச் சேர்ந்த Picture Time நிறுவனத்துடன் இணைந்து, 50 சென்ட் நிலத்தில் Balloon Modern Cinema Theatre-ஐ அமைத்துள்ளார். 20 ஆயிரம் சதுர அடியில் 140 இருக்கைகளைக் கொண்ட பலூன் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திரையரங்கும் கட்டுமானம் இல்லாமல், ராட்சத பலூன் மற்றும் கன்டெய்னர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறை மீதான ஆர்வத்தில், நவீன வசதிகளுடன் புதுமையான திரையரங்குகளை உருவாக்கும் ஆசையில் பலூன் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பலூனுக்கு உள்ளே இருந்து திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தரும். இது ஒரு படம் பார்க்கும் அனுபவத்தை பரவசமாக்கும் முயற்சி ஆகும். கிராமப் புறத்தில் குறைந்த செலவில் மிகச்சிறந்த திரை அனுபவத்தைப் பெற கிராமப்புற திரையரங்குகளின் கட்டணமே நிர்ணயிக்கப்பட உள்ளது.
பலூன் திரையரங்க உரிமையாளர் அக்குபஞ்சர் மருத்துவர் ரமேஷ் உரை :
பலூன் திரையரங்க உரிமையாளர் ரமேஷ், “இந்த பலூனுக்கு உள்ளே திரையரங்கம் இருக்கும் முறை ஆனது ஜெர்மன் நாட்டின் திரையிடல் முறையாகும். மிகச்சிறந்த ஒலி அமைப்புடன் சினிமா பார்ப்பவர்கள் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் இருக்கும் சிறந்த திரையரங்குகளைப் போலவே வடிவமைத்துள்ள இந்த பலூன் திரையரங்கில் உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. திருமணம், பிறந்த நாள் விழாக்களை இந்த பலூன் திரையரங்கில் மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். இந்த பலூன் திரையரங்க வளாகத்தில் கோழிக்கோட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட, பசுமை மாறாத செயற்கை புல்வெளியுடன் அழகிய பூங்கா (Balloon Modern Cinema Theatre) அமைக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் திரையரங்கை வெறும் 3 மணி நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றிடலாம் மட்டும் வேறு இடத்துக்கும் எடுத்துச் செல்லாம். இந்த பலூன் திரையரங்கில் தீ தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டு உள்ளது” என்கிறார்.
Latest Slideshows
-
11733 Crore Collection In Bond Registrations : பத்திரப்பதிவுகள் நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி ரூபாய் வசூல்
-
Vaa Vaathiyaar Teaser : வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியீடு
-
Kanguva Review : கங்குவா படத்தின் திரை விமர்சனம்
-
IND Vs SA 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்